Sunday 17 September 2017

விருதுநகர் உருளைக்கிழங்கு சால்னா

ஆங்கிலத்தில் காண/ TO VIEW IN ENGLISH : கிளிக் 
வணக்கம்,
விருதுநகர் உருளைக்கிழங்கு சால்னா !! பரோட்டாவிற்கு மிகவும் பிரபலமான விருதுநகரில் சால்னாவும் பிரபலம் தான்.அதன் நிறம் மற்றும் சுவை நாம் வீட்டில் செய்தால் வருவதில்லை.நான் பலமுறை முயற்சி செய்து இந்த முறை வெற்றி கண்டுள்ளேன்.இந்த ரெசிபி விருதுநகர் சமையல் என்ற facebook குரூப்பில் இருந்து எடுத்தேன். சுவையான ,மிகவும் பிரபலமான விருதுநகர் சால்னா ரெசிபி உங்களுக்காகே,
தேவையானவை :
வெங்காயம் – 1 .
தக்காளி – 2 .
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.
கருவேப்பில்லை ஒரு கொத்து.
மஞ்சள் பொடி – 1 /4 தேக்கரண்டி.
சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா – 1 தேக்கரண்டி.
காய்கறிகள் – 1 கப் ( நான் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்த்தேன் , நீங்கள் தங்கள் விருப்பம்போல் சேர்க்கலாம்).
தேங்காய் – 1 / 4 கப்.
கொத்துமல்லி ஒரு கை.
எண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு -1 / 4 தேக்கரண்டி.
வறுத்து அரைப்பதற்கு :
நிலக்கடலை – 1 தேக்கரண்டி.
வர மல்லி – 1 தேக்கரண்டி.
வரமிளகாய் – 5 .
கசகசா – 1 / 2 தேக்கரண்டி .
பட்டை – 2 ( 1 ” அளவு ).
கிராம்பு – 3 .
செய்முறை

அ) வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
) வாணலியில் மிதமான சூட்டில் நிலக்கடலை , வரமல்லி , மிளகாய் , பட்டை , கிராம்பு சேர்த்து நன்றாக நிறம் மாறி , நறுமணம் வரும் வரை வணக்கவும்.பின்பு வணங்கிய பொருட்களை பொடியாக அரைத்து கொள்ளவும்.
) வாணலில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொரியும் வரை வதக்கி , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

) பின்பு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி , இஞ்சி பூண்டு விழுது , கருவேப்பில்லை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .

) இப்பொழுது நமது மசாலா பொடிகளை சேர்க்கும் நேரம் , மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா , வறுத்து அரைத்த மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி , நறுக்கிய காய்கறிகளை சேர்த்து , உப்பு ,3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

) தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துவைத்து கொள்ளவும்.

) சால்னாவில் காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு , அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

) இறுதியாக மல்லி தழை தூவி இறக்கி , பரோட்டாவுடன் பரிமாறவும்.

) இந்த சால்னா சப்பாத்தி ,தோசையுடன் சுவைக்கவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு :
) மசாலா வருக்கும் பொழுது , சிறிது கரு நிறமாக வறுத்தால் நமக்கு ஹோட்டலில் வாங்கும் சால்னா போன்ற நிறம் கிடைக்கும் (ஆனால் கருகிவிடக்கூடாது).
) நான் உருளைக்கிழங்கு  மட்டுமே சேர்த்தேன் , நீங்கள் தங்கள் விருப்பம்போல் சிக்கன் , கேரட் , பீட்ரூட் ,கோஸ் , பட்டாணி ,முட்டை எதுவேண்டுமானால் சேர்க்கலாம்.காய்களை மசிய வேகவைக்க வேண்டாம் வேகும் பதம் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..
) தண்ணீர் உங்களுக்கு வேண்டுமான அளவு சேர்க்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...