Wednesday 27 September 2017

பன்னீர் ஜலபிரெஜி

TO VIEW IN ENGLISH : CLICK HERE
வணக்கம் ,
பன்னீர் ஜலபிரெஜி நான் அடிக்கடி செய்யும் பேலியோ உணவாகும்.
மேலும் இந்த சைடுடிஷ் சப்பாத்தி , ரொட்டி மற்றும் தோசைக்கும் நன்றாக இருக்கும் , செய்வதும் மிகவும் சுலபம்.
பன்னீர் ஜலபிரெஜி செய்முறை உங்களுக்காக ,


தேவையானவை :
பன்னீர் – 200 கிராம்.
வெங்காயம் – 1 .
இஞ்சி – 1 / 2 ” துண்டு .
பூண்டு – 5 பல்.
பச்சை குடைமிளகாய் – 1 .
சிவப்பு குடைமிளகாய் – 1 .
மஞ்சள் குடைமிளகாய் – 1 .
கேரட் – 1 சிறியது .
வர மிளகாய் – 2 .
தக்காளி – 3 .
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி .
வெண்ணை – 2 தேக்கரண்டி .
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி .
கரம் மசாலா – 1 தேக்கரண்டி .
மஞ்சள் பொடி – 1 / 4 தேக்கரண்டி .
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி .
மல்லி பொடி – 1 தேக்கரண்டி .
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி .
கருவேப்பில்லை சிறிது .

செய்முறை :
) வெங்காயம் , குடை மிளகாய் ,இஞ்சி ,பூண்டு அனைத்தையும் நீல வாக்கில் வெட்டி கொள்ளவும்.பனீரை சதுரமாக வெட்டிவைத்துக்கொள்ளவும் .


) தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.


) வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணை சேர்த்து ,பண்ணீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.வதக்கிய பண்ணீர் துண்டுகளை தனியாக வைக்கவும்.
) வாணலியில் மீதமிருக்கும் வெண்ணையை சேர்த்து , சீரகம் , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.


) அத்துடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து ,பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.


) அத்துடன் வெங்காயம் , குடை மிளகாய் சேர்த்து , மிருதுவாக வதங்கும் வரை வதக்கவும் .



) இதனுடன் மல்லி பொடி , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி சேர்த்து 1 நிமிடம் கிளறிவிடவும்.


) பின்னர் அரைத்த தக்காளி விழுது , உப்பு சேர்த்து ,பச்சை வாடை போய் , மசாலா கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

) பண்ணீர் , கஸோரி மேத்தி , கரம் மசாலா சேர்த்து , பண்ணீர் மசாலாவுடன் கலங்கும்படி கிளறிவிடவும்.
) இறுதியாக எலுமிச்சை சாறு , கருவேப்பில்லை சேர்த்து , பரிமாறவும்.







No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...