Tuesday 3 October 2017

கேரளா மோர் குழம்பு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
கேரளா மோர் குழம்பு ! மோர் குழம்பில் பல வகைகள் உண்டு , இது கேரளா முறைப்படி செய்யக்கூடிய மோர் குழம்பாகும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய மோர் குழம்பு செய்முறை உங்களுக்காக,

ரெசிபி மூலதனம் : Priyakitchentte
செய்யும் நேரம் : 15 நிமிடம் .
நபர்கள் : 3

தேவையானவை :
மோர் - 2 கப் ( அல்லது ) 1 கப் தயிருடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
தக்காளி - 2 .
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1 / 2 கப்.
சீரகம் - 1 / 2 தேக்கரண்டி .
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தாளிப்பதற்கு :
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி .
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் -1/2 தேக்கரண்டி .
கருவேப்பிலை  - ஒரு கொத்து

செய்முறை
) தக்காளி பழத்தை துண்டுகளாக்கி , 1 / 2 கப் தண்ணீரில் வேகவைக்கவும் .
) தேங்காய் , மிளகாய் , சீரகம் ,மஞ்சள் ஆகியவற்றை சிறுதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
) பாத்திரத்தில் அரைத்த விழுது  , வேகவைத்த தக்காளி சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும் ( பச்சை வாடை போகும்வரை ).
) பின்பு மோர் , உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைத்த சூட்டில் கொதிக்கவைக்கவும்.
) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கி , குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும் .
) சூடான சாதம், அப்பளத்துடன் பரிமாறலாம்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...