Tuesday 10 October 2017

வெற்றிலை ரசம்

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
வெற்றிலை ரசம் ! குளிர் மற்றும் மழை காலங்களில் குளிர் ஜுரத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இந்த ரசம் மிகுந்த உதவியாக இருக்கும்.
சுலபமான , சத்தான வெற்றிலை ரசம் செய்முறை உங்களுக்காக ,

தேவையானவை :
வெற்றிலை - 4
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
மல்லி பொடி- 1தேக்கரண்டி .
பூண்டு - 6+ 4பல்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தேங்காய் - 3 தேக்கரண்டி
தக்காளி - 2
புளி- சிறிய துண்டு
உப்பு - தேவையானளவு
கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய்/ நெய்- 1 தேக்கரண்டி
மல்லியிலை - 2 தேக்கரண்டி

செய்முறை :
) வெற்றிலையை நன்றாக கழுவி , நடுவில் இருக்கும் தண்டை எடுத்துவிடவும்.
) மிளகு , சீரகம் , 2 வெற்றிலை , 6 பூண்டு , மல்லி பொடி, தேங்காய் ஆகியவற்றை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) தக்காளியை மசித்துக்கொள்ளவும்.
) புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும்.
) வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு சேர்த்து, கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
) அத்துடன் புளி தண்ணீர் , தக்காளி , உப்பு, பெருங்காயம் , அரைத்த விழுது, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
) ரசம் கொதிக்காரம்பித்தவுடன் மல்லியிலை , மீதமிருக்கும் வெற்றிலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
) சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...