Wednesday 11 October 2017

பன்னீர் வெள்ளை குருமா

TO VIEW IN ENGLISH: PLS CLICK

பன்னீர் வெள்ளை குருமா


வணக்கம்,
பன்னீர் வெள்ளை குருமா! குருமா செய்வதற்கு பல செய்முறைகள் இருக்கிறது , இந்த வகை குருமாவை நாங்கள் வெள்ளை குருமா என்போம்.குருமா பழுப்பு நிறத்தில் தான் இருக்கும் ஆனாலும் இதற்கு வெள்ளை குருமா என்று பெயர்.
இந்த குருமாவில் எந்த காய்களையும் சேர்க்கலாம் , நான் பன்னீர் சேர்த்துளேன்.
சுவையான பன்னீர் வெள்ளை குருமா செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பன்னீர் – 1கப்
வெங்காயம் – 1( பெரியது )
தக்காளி – 1
பச்சை மிளகாய் -3
கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு 
கடுகு – 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் -1தேக்கரண்டி
அரைப்பதற்கு :
தேங்காய் – 1/8 கப்
பொறித்தக்கடலை(வறுகடலை) -2தேக்கரண்டி
கசகசா  – 1/2தேக்கரண்டி .
பூண்டு – 6பல்
இஞ்சி 1” – 2துண்டு
கிராம்பு – 3
சோம்பு -1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) பனீரை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஆ) வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

இ) அரைக்கும் பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
ஈ) குக்கர்இல் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொரிந்தபின் ,பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

உ) பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும்வரை வதக்கி , அரைத்த விழுதை சேர்க்கவும்.
ஊ) இத்துடன் உப்பு , 1 கப் தண்ணீர் ,பன்னீர் சேர்த்து கலக்கி , குக்கர்ஐ மூடி , 2 விசில் விடவும்.

எ) ஆவி அடங்கியவுடன் , குக்கர்ஐ திறந்து , குருமா மிகவும் தண்ணீராக இருந்தால் சில நிமிடம் கொதிக்கவிடவும்.

ஏ)குருமா தேவையான பக்குவத்திற்கு வந்தவுடன் , இறுதியாக கரம் மசாலா தூவி , ஒரு முறை கலக்கி , அடுப்பில் இருந்து இறக்கவும்.

ஐ) சப்பாத்தி , இட்லி , தோசை , ரொட்டியுடன் பரிமாற நன்றாக இருக்கும் . நான் வெந்நீர் சப்பாத்தியுடன் பரிமாறினேன்.
குறிப்பு :
அ) குக்கர்க்கு பதில் வாணலியிலும் செய்யலாம்.
ஆ) பொறித்தக்கடலை சீக்கிரம் அடிபிடித்துவிடும் , அதனால் மசாலாவை ஊற்றியவுடன் தண்ணீர் சேர்த்துவிடவும்.
இ) வாணலியில் செய்வதாக இருந்தால் ,அடிபிடிக்காமல் இருக்க 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும்.
எ)பன்னீருக்கு பதில் முட்டை அல்லது விருப்பமான காய்களை சேர்க்கலாம்.
ஏ) குருமாவிற்கான காரம் பச்சைமிளகாயிலிருந்து கிடைப்பதால் , பச்சை மிளகாயினை சிறிது தாராளமாக சேர்க்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...