Tuesday 24 October 2017

மட்டன் நெய் வறுவல்

மட்டன் நெய் வறுவல்


TO VIEW RECIPE IN ENGLISH : CLICK HERE
வணக்கம்,
மட்டன் நெய் வறுவல் !! காரசாரமான, நெய் நறுமணத்துடனான ,சுவையான ஆட்டு வறுவல்..இந்த வறுவல் செய்தவுடன் சமையல் அறை முழுவதும் சிறந்த நாவை சுண்டியிழுக்கும் நறுமணம் பரவியது.சப்பாத்தி மற்றும் தோசையுடன் சுவைக்க அருமையாக இருந்தது.
சுவையான மட்டன் நெய் வறுவல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ஆட்டுக்கறி / மட்டன் – 1 கிலோ.
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
மஞ்சள் பொடி – 1 / 2 டீஸ்பூன்.
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்.
தயிர் – 3 டீஸ்பூன்.
உப்பு – தேவைக்கேற்ப.
கருவேப்பில்லை – ஒரு கொத்து .
மல்லி இலை – ஒரு கொத்து .
நெய் – 5 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
மிளகு – 1 டீஸ்பூன்.
முழு மல்லி – 1 டீஸ்பூன்.
சோம்பு – 1 டீஸ்பூன்.
சீரகம் – 2 டீஸ்பூன்.
பட்டை – 1 ” துண்டு .
கிராம்பு – 4 .
நட்சத்திர சோம்பு – 1 .
இஞ்சி – 1 ” துண்டு .
பூண்டு – 4 பல்.
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்.
செய்முறை :
௧) வாணலியில் மிளகு , சீரகம் , சோம்பு ,பட்டை , கிராம்பு ,நட்சத்திர சோம்பு , முழு மல்லி ஆகியவற்றை நறுமணம் வரும்வரை வறுத்து ஆறவிடவும்.
௨) அத்துடன் இஞ்சி , பூண்டு , எலுமிச்சை சாறு சேர்த்து ,தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
௩) குக்கர்இல் நெய்யை சூடாக்கி , இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி , மட்டன் ,மஞ்சள் பொடி,சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
௪) குக்கர்ஐ மூடி 5 விசில் அல்லது மட்டன் வேகும் வரை விடவும் .
௫) மட்டன் வெந்தவுடன் மட்டன் தண்ணீரை தனியான எடுத்துவைக்கவும்.
௬) வாணலில் நெய் , அரைத்த மசாலா ,மிளகாய் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
௭) பின்பு தயிர் சேர்த்து 1 நிமிடம் மசாலா நன்றாக சுருள வதக்கவும்.
௮) அதனுடன் வேகவைத்த மட்டன் சேர்த்து நன்றாக , ஈர பதம் வற்றும் வரை வதக்கி கருவேப்பிலை , மல்லி தூவி இறக்கவும்.
௯) சுவையான , சூடான மட்டன் வறுவல் தயார்.



 

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...