Tuesday 10 October 2017

சென்னை பிரியாணி கத்திரிக்காய்

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம்,
சென்னை பிரியாணி கத்திரிக்காய் ! சென்னைவாசிகள் நிச்சயம் இந்த கத்திரிக்காய் மசாலாவை சுவைத்திருப்பார்கள்.அங்கே பிரியாணியுடன் இந்த கத்திரிக்காய் மசாலாவும் , தயிர் பச்சடியும் தான் கொடுப்பார்கள்.
கத்திரிக்காய் பிடிக்காத என் கணவர் இந்த மசாலா மட்டும் உண்பார் , அதனால் இந்த மசாலா செய்முறையை சென்னையில் எனது பக்கத்து வீட்டு தோழியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
இந்த மசாலாவில் கத்திரிக்காய் நன்றாக வெந்து , கரையுமளவு இருக்கும் ,அதனால் நன்றாக வேகவிடுங்கள்.
சென்னை பிரபலமான கத்திரிக்காய் மசாலா செய்முறை உங்களுக்காக ,

தேவையானவை :
கத்திரிக்காய் – 4
கடுகு -1/8 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை -1
பட்டை -1″ துண்டு – 2
கிராம்பு -3
ஏலம் -1
சீரகம் -1 தேக்கரண்டி
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது 
தக்காளி -2
மஞ்சள் போடி – 1/4 தேக்கரண்டி
மிளகாய் போடி -1 1/2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா / கரம் மசாலா -1 தேக்கரண்டி
புளி – பெருநெல்லிக்காய் அளவு .
வெல்லம் -1 தேக்கரண்டி .
மல்லி இலை -3 தேக்கரண்டி
உப்பு –  தேவையானளவு 
நல்லெண்ணெய் / ஆயில் -5 தேக்கரண்டி.

செய்முறை :
அ) கத்தரிக்காய்ஐ நறுக்கி உப்பு நீரில் போட்டு வைக்கவும் .வெங்காயம் , தக்காளி , மிளகாய் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.புளியை சூடு நீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாறு எடுத்து வைக்கவும்.

ஆ) வாணலியில் என்னை சூடாக்கி , கடுகு , பிரிஞ்சி இலை , பட்டை ,கிராம்பு ,சீரகம் ,ஏலம் சேர்த்து குறைந்த சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.

இ) பின்பு வெங்காயம் , மிளகாய் சேர்த்து வதக்கவும் , அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை மறையும் வரை வதக்கவும்.

ஈ) தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கி ,மஞ்சள் போடி , மிளகாய் போடி , சிக்கன் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ,புளி தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
உ) புளியின் பச்சை வாடை மறைந்த பிறகு , கத்திரிக்காய் ( தண்ணீர் வடித்து) , வெள்ளம் , உப்பு சேர்த்து ,1 கப் தண்ணீர் சேர்த்து , மூடிவைத்து மிதமான சூட்டில் , கத்திரிக்காய் வேகும் வரை கொதிக்கவிடவும்.
ஊ) மசாலா கெட்டியாகி , கத்திரிக்காய் நன்றாக வெந்தபிறகு , மல்லியிலை தூவி இறக்கவும்.
எ) நான் ஆம்பூர் தம் பிரியாணியுடன் பரிமாறினேன் , நீங்கள் பிரியாணி ,புலாவ் என்று உங்கள் விருப்பம்போல் பரிமாறலாம்.




No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...