Wednesday 1 November 2017

செட்டிநாடு காளான் பொடி வறுவல்

TO VIEW IN ENGLISH : PLS CLICK 
வணக்கம் ,
செட்டிநாடு காளான் பொடி வறுவல் ! நான் இந்த வறுவலை சில நாட்களுக்கு முன்பு , மோர் குழம்புடன் செய்தேன். செட்டிநாடு சமையலின் சிறப்பே அதன் நறுமணமிக்க மசாலாதான். சுவையான செட்டிநாடு காளான் பொடி வறுவல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
காளான் - 200கிராம்.
எண்ணெய் / நெய் -1 தேக்கரண்டி .
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி .
உப்பு - தேவையானளவு.
மல்லி இழை- ஒரு கொத்து .
எலுமிச்சை சாறு - 1தேக்கரண்டி .

வறுத்து பொடிப்பதற்கு:
முள்ளுமல்லி - 2 தேக்கரண்டி .
மிளகு - 1தேக்கரண்டி .
உளுந்து பருப்பு - 1 1/2தேக்கரண்டி .
காய்ந்த மிளகாய் - 4

செய்முறை
) காளானை நன்றாக சுத்தம்செய்து , நீளவாக்கில் பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
) வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் அரைக்கும் பொருட்களை பொன்னிறமாக குறைந்த சூட்டில் வறுத்துக்கொள்ளவும் .
 ) வறுத்த பொருட்களை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
) வாணலியில் எண்ணெய் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும் .

) பின்பு காளான் துண்டுகள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் தண்ணீர் சேர்க்காமல் வேகவிடவும்.
) காளான் வெந்தபிறகு, பொடித்த மசாலா பொடி சேர்த்து, காளானுடன் மசாலா நன்றாக கலங்கும்படி வதக்கவும்.
) தண்ணீர் முழுவதுமாக வற்றிய பின், மல்லி இழை , எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி , அடுப்பில் இருந்து இறக்கவும்.
சூடான சாதம், சப்பாத்தியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...