Wednesday 1 November 2017

தக்காளி முட்டை மசாலா

TO VIEW IN ENGLISH : PLS CLICK



தக்காளி முட்டை மசாலா

வணக்கம்,
தக்காளி முட்டை மசாலா..முட்டை மற்றும் தக்காளி எங்கள் வீட்டில் அனைவர்க்கும் பிடிக்கும்.அதிலும் முட்டையும் தக்காளியும் சேர்ந்தால் மிகவும் அருமை.
சுவையான கண்கவர் தக்காளி முட்டை மசாலா செய்முறை உங்களுக்காக ,
நபர்கள் : 5
தேவையானவை :
முட்டை – 5 .
சோம்பு – 1 .
பட்டை – 1
கிராம்பு – 3
ஏலம் – 2
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் -1 / 4 தேக்கரண்டி .
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 / 2 தேக்கரண்டி .
வெண்ணை () நெய் – 2 தேக்கரண்டி .
கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
அரைப்பதற்கு :
தக்காளி – 2 பெரியது .
வெங்காயம் – 2 பெரியது.
பூண்டு – 5 பல் .
இஞ்சி ஒரு துண்டு .
செய்முறை :
) முட்டையை வேகவைத்து , ஓட்டை பிரித்து எடுக்கவும்.ஒரு வாணலில் 1 தேக்கரண்டி வெண்ணை () நெய் சேர்த்து முட்டையை அதில் இட்டு பொன்னிறமாக வறுக்கவும்.வணங்கிய முட்டைகளை தனியாக வைக்கவும்.
) வெங்காயம் , பூண்டு ,இஞ்சி அனைத்தையும் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும் .
) தக்காளியை 2 கப் தண்ணீரில் வேகவைத்து அரைத்து கொள்ளவும்.

) வாணலில் எண்ணெய் சூடாக்கி சோம்பு , பட்டை ,கிராம்பு, ஏலம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.


) அத்துடன் பொடியாக அரிந்த பச்சை மிளகாய் , அரைத்த வெங்காய,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

) பச்சை வாடை போய் , நிறம் மாறும் பக்குவத்தில் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,மல்லி பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
) இத்துடன் தக்காளி விழுதையும் சேர்த்து ,மிதமான சூட்டில் பச்சை வாடை போய் , மசாலா கெட்டியாகம் வரும் வரை வதக்கவும்.
) இப்பொழுது 1 கப் தண்ணீர் சேர்த்து , தங்களுக்கு வேண்டும் பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
௧௦) இறுதியாக வறுத்த முட்டை, கரம் மசாலா சேர்த்து ,மெதுவாக மசாலாவுடன் நன்றாக கலங்கும்படி கலக்கி ( முட்டை பிய்ந்துபோகாமல்) , மல்லி தலை சேர்த்து , அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
௧௧) சூடான , சுவையான தக்காளி முட்டை மசாலா தயார் ..தோசை , சப்பாத்தி , ஆப்பம் மற்றும் ரொட்டியுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.    

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...