Tuesday 7 November 2017

நிலக்கடலை சுண்டல்

நிலக்கடலை சுண்டல்


TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,
நிலக்கடலை சுண்டல் ! சிறுவயதில் எங்கள் தோட்டத்தில் நிலக்கடலை விளைவிப்போம்,ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்ததும் நிலக்கடலையை தரம் பிரிப்போம்.முதல் தர முத்துக்களை விதை முத்துக்களாகவும் , அடுத்த தர முத்துக்களை எங்கள் உபயோகத்திற்கும்,சந்தைக்கும் அனுப்பிவிடுவோம்.
புதிய நிலக்கடலை சுண்டல் சுவை அருமையாக இருக்கும்.
அந்த சுவையான நிலக்கடலை சுண்டல் செய்முறை உங்களுக்காக ,
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
நபர்கள் : 3
தேவையானவை :
நிலக்கடலை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையானளவு
தேங்காய் எண்ணெய் – 2தேக்கரண்டி
கடுகு -1/8 தேக்கரண்டி
வெல்லம் -1 தேக்கரண்டி
செய்முறை :
அ) நிலக்கடலையை தண்ணீரில் 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

ஆ) தண்ணீரை வடித்துவிட்டு , குக்கர்இல் நிலக்கடலை , 2 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து 5 விசில் விடவும் .விசில் அடங்கியவுடன் தண்ணீர் வடித்து , கடலையை தனியாக வைக்கவும்.

இ) வெங்காயம் , மிளகாய் , கருவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிவைக்கவும்.

ஈ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , பச்சை மிளகாய் , வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
உ) பின்பு நிலக்கடலையை சேர்த்து , ஒரு முறை கிளறி , உப்பு , தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
ஊ) அடுப்பில் இருந்து இறக்கி , வெல்லத்துடன் பரிமாறவும்.

குறிப்பு :
அ) வெல்லம் செரிமானத்திற்கு உதவும் , நிலக்கடலை செரிமானத்திற்கு அதிகநேரம் ஆகும் , அதனால் வெல்லத்துடன் உண்டால் எளிதாக செரிமானம் ஆகும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...