Wednesday 1 November 2017

மங்களூர் சுக்கா சிக்கன்

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மங்களூர் சுக்கா சிக்கன்


வணக்கம் ,
மங்களூர் சுக்கா சிக்கன் !! நாங்கள் சிக்கன் விரும்பிகள் , சிக்கனில் எது செய்தாலும் எங்களுக்கு பிடிக்கும் .அதனால் சிக்கனில் எதாவது புதிதாக செய்வது வழக்கம்.இன்று மங்களூர் பாரம்பரிய சிக்கன் சுக்கா செய்தேன்.
மிகவும் அருமை , நிச்சயம் எனது மெனுவில் இந்த சுக்கா சிக்கன் முதலில் இருக்கும்  .
மசாலா மணத்துடன் , அருமையான சிக்கன் சுக்கா செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி .
புளி -1″ – 1 துண்டு
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 2 ( பெரியது) .
நெய் -2 தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானஅளவு.
வறுப்பதற்கு :
துருவிய தேங்காய் -1 கப்
பூண்டு -12 பல்
சீரகம் -1 தேக்கரண்டி .
எண்ணையில் வறுப்பதற்கு :
நெய் -1 தேக்கரண்டி
வரமிளகாய் -10
முழு மல்லி -3 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
வெந்தயம் -1/4 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
செய்முறை :
) சிக்கனை நன்றாக கழுவி ,சுத்தம் செய்து வைக்கவும் .வெங்காயத்தை நறுக்கி வைக்கவும் .
) வாணலியில் என்னை சேர்க்காமல் தேங்காயை , குறைந்த சூட்டில் நறுமணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றவும்
) அதே வாணலியில் சீரகம் , பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

) வாணலியில் நெய் சேர்த்து முழு மல்லி , சீரகம் சேர்த்து 30 வினாடிகள் மிதமான சூட்டில் வறுக்கவும் , அத்துடன் மிளகு , சோம்பு , வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக , நறுமணம் வரும் வரை வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு தட்டிற்கு மாற்றவும் .
) பின்னர் அதே வாணலியில் மிளகாயினை சேர்த்து வறுத்தெடுத்து , மேலே உள்ள வறுத்த பொருட்களோடு ஆறவிடவும் .

) அறியபொருட்களோடு மஞ்சள் தூள் , பூண்டு , புளி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
) வாணலியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து 1 நறுக்கிய வெங்காயம் , சிக்கன் ,உப்பு ,அரைத்த விழுது சேர்த்து கலக்கி , சிக்கன் வேகும்வரை வேகவிடவும் .
) சிக்கன் வெந்தவுடன் ,அரைத்த தேங்காய் பொடியினை சேர்த்து கலக்கி , ஒரு மூன்று நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
) ஒரு சிறிய வாணலியில் மீதமிருக்கும் நெய் சேர்த்து , 1 நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக தாளித்து சிக்கனுடன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
) நான் ஆம்பூர் சிக்கன் பிரியாணியுடன் பரிமாறினேன் , நீங்கள் சாதத்துடன், தோசை , சப்பாத்தி , ஆப்பம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.பேலியோ டயட் என்றால் அப்படியே சாப்பிடலாம்.

குறிப்பு :
அ) நெய் இல்லைஎன்றால் நல்லெண்ணெய் உபயோகப்படுத்தலாம் அனால் நெய் நன்றாக இருக்கும்.
ஆ) தேங்காய் பொடி சேர்த்தபின் அதிகநேரம் வேகவிடவேண்டாம் , 3  நிமிடம் போதும்.
இ) வறுக்கும் பொழுது எப்பொழுதும் குறைந்த சூட்டில் வறுப்பது சுவையை கூட்டும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...