Wednesday 1 November 2017

மதுரை கறிவடை

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மதுரை கறிவடை

Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES, SNACKS on by : Saranya Arun Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
மதுரை கறிவடை! எனது அப்பாவுக்கு இந்த கறிவடை மிகவும் பிடிக்கும்.
எனது  பாட்டி கறிவடையை அருமையாக செய்வார்கள் , அவர்கள் ஆட்டுக்கல்லில் கறியை கையால் ஆட்டுவார்கள் .இவ்வாறு கையால் ஆட்டுவதனால் சுவை அருமையாக இருக்கும்,ஆனால் இப்பொழுது பாரம்பரிய முறைப்படி செய்வது என்பது முடியாது என்பதால் நான் சுலபமான வழியில் செய்துவிடுவேன் .
சுவையான மட்டன் கறிவடை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
மட்டன் கொத்து கறி – 500 கிராம்.
முட்டை – 1
பச்சை மிளகாய் – 3
உப்பு தேவைக்கேற்ப
சோம்பு – 1தேக்கரண்டி
பட்டை 1”-2துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு கொத்து
மல்லியிலை ஒரு கைப்பிடி
இஞ்சி – 1துண்டு
பூண்டு – 4பல்
தேங்காய் – 1/8கப்
சின்ன வெங்காயம் – 20
வறுத்த கடலை -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி
எண்ணெய் பொறிப்பதற்கு
செய்முறை :
) மட்டன் கறியை நன்றாக கழுவி , தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடவும்.வெங்காயம்,கருவேப்பிலை , மல்லி ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
) வாணலியில் பட்டை , கிராம்பு ,கசகசா , சோம்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
) வறுத்த பொருள்களோடு , இஞ்சி ,பூண்டு , பச்சை மிளகாய் ,கடலை ,தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் கொத்து கறி , அரைத்த விழுது , வெங்காயம் , மல்லி , கருவேப்பிலை ,உப்பு ,முட்டை,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
) சிறு உருண்டைகளாக பிடித்து , எண்ணையில் பொறித்தெடுத்து பரிமாறவும்.

பேலியோ டயட் :
) வறுத்த கடலைக்கு பதில் பாதாம் பவுடர் சேர்க்கவும்.
) எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு பதில் பணியார கல்லை சூடாக்கி சிறிது நெய் தடவி ,வடை உருண்டைகளை அதில் வைத்து பொறித்தெடுக்கவும்.

) எண்ணையில் பொரித்தெடுப்பதற்கு சிறிது நேரம் பிடிக்கும் ஆனால் பணியார கல்லில் செய்வது 15 நிமிடங்கள் ஆகும் ஆனாலும் மிகவும் சத்தானது.
) பணியார கல்லில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு வடையை திருப்பி விட்டு , பொன்னிறமாகும் வரை குறைத்த சூட்டில் பொறித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...