Wednesday 1 November 2017

மட்டன் கீமா கட்லெட் மசாலா

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மட்டன் கீமா கட்லெட் மசாலா


வணக்கம் ,
மட்டன் கீமா கட்லெட் மசாலா !! மட்டனில் செய்வதற்கு நிறைய ரெசிபிக்கள் உள்ளன.நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதியதாக முயற்சி செய்வது வழக்கம்.இம்முறை கட்லெட் மசாலா செய்தேன்.
மிகவும் எளிதாக , மற்றும் புதுமையான மட்டன் கட்லெட் மசாலா செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
மசாலா :
வெங்காயம் – 1 .
இஞ்சி பூண்டு விழுது – 1 / 2 தேக்கரண்டி .
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி .
கரம் மசாலா – 1 / 2 தேக்கரண்டி .
மஞ்சள் பொடி – 1/ 4 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 1 / 2 தேக்கரண்டி .
மிளகு பொடி – 1 / 4 தேக்கரண்டி .
தக்காளி – 3 .
உப்பு தேவையானஅளவு.
கொத்தமல்லி இலை சிறிதளவு .
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி .
தேங்காய் எண்ணெய் / ஆயில் – 1 தேக்கரண்டி .
கட்லட்டிற்காக :
மட்டன் கொத்துக்கறி -1 / 2 கிலோகிராம் .
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி .
கரம் மசாலா – 1 / 2 தேக்கரண்டி .
உப்பு சிறிதளவு .
முட்டை – 1 .
தேங்காய் எண்ணெய் / ஆயில் – 1 தேக்கரண்டி .
அரைப்பதற்கு :
புதினா இலை ஒரு கையளவு .
பாதாம் () முந்திரி – 3 .
இஞ்சி – 1 / 2 ” – 1 .
பூண்டு – 5 பல்.
பச்சை மிளகாய் – 3 .
செய்முறை :
) புதினா , பாதாம் () முந்திரி , இஞ்சி , பூண்டு , பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்.
) கொட்டுக்கறியை சுத்தம் செய்து , உப்பு , அரைத்த விழுது , மிளகாய் பொடி , கரம் மசாலா ,முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
) தோசை கல்லை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி , கறியை சிறு தடைகளாக தட்டி கல்லில் வைக்கவும்.

) மேலே எண்ணெய் தெளித்து , மூடிவைத்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

) பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

) இதே போல் இருபக்கமும் திருப்பி பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.


மசாலா :
) வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம் , நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
) அத்துடன் இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் பொடி , மல்லி பொடி , கரம் மசாலா ,மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
) பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
) அத்துடன் 1 / 4 கப் தண்ணீர் சேர்த்து ,உப்பு ,மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

) இறுதியாக மட்டன் கட்லட்டை சேர்த்து , நிதானமாக கிளறி , பரிமாறவும்.

) நான் மட்டன் பிரியாணியுடன் பரிமாறினேன்.
குறிப்பு :
) கட்லட்டை தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
) தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்.

W3Counter Web Stats

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...