Friday 5 January 2018

கார பூரி

கார பூரி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
எப்பொழுதும் சாதாரண பூரி செய்யும் நமக்கு என்றாவது ஒரு நாள் அந்த பூரியில் எதாவது வித்யாசமாக செய்யலாம் என்று தோன்றும்.
எனக்கு அவ்வாறு தோன்றிய பொழுது இந்த ரெசிபி நினைவில் வந்தது .
இந்த ரெசிபி எனது சகோதரி ஹைதெராபாத்தில் வசித்தபொழுது அவரது தோழி அவருக்கு கற்றுத்தந்த ரெசிபியாகும் .எனக்கு ஒரு முறை சொல்லியிருக்கிறார் அனால் நான் இப்பொழுது தான் செய்தேன் .
சாதாரண பூரியை விடவும் இந்த காரபூரி சுவையாகவும் , வித்தியாசமாகவும் இருந்தது .
காரப்பூரி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கோதுமை மாவு – 1 1 / 2 கப்.
பெருங்காயம் – 1 / 8 தேக்கரண்டி .
மிளகு – 1 / 2 தேக்கரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
வரமிளகாய் – 2 .
கருவேப்பில்லை சிறிது .
உப்பு – 1 தேக்கரண்டி.
தண்ணீர் – 3 / 4 கப்.
எண்ணெய் பொரித்து எடுக்க.
செய்முறை :
) மிளகு , சீரகம் , மிளகாய் அனைத்தையும் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , உப்பு , பெருங்காயம் , அரைத்த போடி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

) அத்துடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசையவும்.

) பிசைந்த மாவை 15 நிமிடம் வைத்து அதன் பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

) ஒவொரு உருண்டையையும் சிறிய ,தடிமனான தட்டைகளாக தேய்த்து சூடான எண்ணையில் இருபக்கமும் பொல்லும் வரை பொரித்து எடுக்கவும்.
) பொன்னிறமாக வெந்த பூரியை  எண்ணையை வடித்து சூடாக பரிமாறவும்.நான் தக்காளி முட்டை மசாலாவுடன் பரிமாறினேன் , நீங்கள் உங்கள் விருப்பம் போல் எந்த மசாலாவுடன் பரிமாறலாம் .


குறிப்பு :
) வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.
) உப்பு மற்றும் தண்ணீர் ஒவொரு மாவிற்கும் வேறுபாடும் அதனால் தேவையான அளவு சேர்க்கவும்.
) எண்ணெய் நன்றாக சூடான பின்பு பூரியை போடவும் , இல்லையென்றால் பூரி பொல்லாது மேலும் எண்ணெய் பிடிக்கும் .            

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...