Wednesday 10 January 2018

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

 கடலைப்பருப்பு இனிப்பு இட்லி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
மூன்று வாரங்களுக்கு பின்பு இன்றுதான் எனது வெப்சைட்ஐ திறந்துள்ளேன் .
இந்த வருட கோடை விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது , ஆனால் மொபைல் நெட்ஒர்க் சரியாக வேலை செய்யாததால் ரெசிபி போஸ்ட் செய்யமுடியவில்லை.இன்று நான் உங்களுக்காக ஒரு சுலபமான ,மாலை நேர தேநீருடன் சாப்பிட சுவையான ஸ்னாக்கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெசிபி போஸ்ட் செய்யவுள்ளேன் .
நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தபொழுது எனது அம்மா எங்களுக்காக இந்த இட்லியை செய்தார்கள் , மிகவும் மெதுமெதுவென்று , அளவான இனிப்புடன் ,சூடாக இருந்தது .
சுவையான கடலைப்பருப்பு இனிப்பு இட்லி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 300 கிராம் .
பச்சரிசி – 25 கிராம்.
வெல்லம் – 200 கிராம் .
துருவிய தேங்காய் – 1 கப் (தேவையென்றால் இன்னும் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்).
சமையல் சோடா – 1 / 4 தேக்கரண்டி .
ஏலம் – 4 .
செய்முறை :
) கடலைபருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி , போதுமான தண்ணீரில் சுமார் 8 மணிநேரம் ஊறவைக்கவும் .

) ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை தண்ணீர் வடித்துவிட்டு , கரகரப்பான பதத்திற்கு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
) இறுதியாக வெல்லம் மற்றும் ஏலம் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும் .

) ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து , அத்துடன் துருவிய தேங்காய் , சமையல் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும் .

) கலவை இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும் , கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
) இட்லித்தட்டில்  இட்லி போல் ஊற்றி , 10 நிமிடம் (கத்தி ஒட்டாமல் வரும் வரை) வேகவைத்து எடுக்கவும் .

) சூடான ,சத்தான இனிப்பு இட்லி தயார் .சூடாக பரிமாறவும் .

குறிப்பு :
) வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்க்கலாம் , ஆனால் பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...