Friday 12 January 2018

வாழைப்பழ பனக்கோட்ட

 வாழைப்பழ பனக்கோட்ட


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம்,
வாழைப்பழ பனக்கோட்ட!!
குழந்தைகளுக்கு இந்த வெய்யிலை சமாளிக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டியுள்ளது .அதிலும் என் மகளை விடுமுறையில் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது .அதனால் ஏதாவது புதிதாக செய்து அவளை சமாளித்து கொண்டிருக்கிறேன்.
இந்த பனக்கொட்டவும் அப்படித்தான் , சத்தான வாழைபழத்தில் இருந்து சில்லென்று செய்து கொடுத்தேன் .
செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பழுத்த வாழைப்பழம் – 3
நெய் – 1 தேக்கரண்டி
ஜெலட்டின் – 2 தேக்கரண்டி .
தண்ணீர் – 1/4 கப்
விப்பிங் கிரீம் – 1 கப் .
சர்க்கரை – 1/8 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1தேக்கரண்டி .
ஜாதிக்காய் பொடி – 1/8 தேக்கரண்டி .
சர்க்கரை பாகு :
சர்க்கரை – 1/8 கப்
தண்ணீர் – 1 தேக்கரண்டி
செய்முறை :
) முதலில் பாகு செய்துகொள்வோம் ..ஒரு சிறிய வாணலியில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும் .சர்க்கரை கரைந்து பாகு ஆகும்.மேலும் குறைத்த சூட்டில் கொதிக்கவிடவும் பாகு கொதித்து பொன்னிற காவி கலவையாகிவிடும் .

) உடனே இந்த பாகை நெய் தடவிய சிறிய கப்களில் அடிப்பாகம் பரவும்படி ஊற்றிவிடவும் .

) ஒரு வாணலில் நெய் சேர்த்து . நறுக்கிய வாழைப்பழங்களை போட்டு மிதமான சூட்டில் வதக்கவும்.

) பழங்கள் பொன்னிறமாக வதங்கியவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும் .
) ஜெலட்டினை தண்ணீரில் பத்து நிமிடம் அல்லது ஜெலட்டின் கரையும்வரை ஊறவைக்கவும்.

) ஒரு வாணலில் விப்பிங் கிரீம் , சர்க்கரை சேர்த்து குறைந்த சூட்டில் , சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

) சர்க்கரை கரைந்தவுடன் ,அடுப்பில் இருந்து இறக்கி , அரைத்த பழ கலவை , ஜெலட்டின் கலவை , வெண்ணிலா எசென்ஸ் , ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி , நெய் தடவிய பாகு பாத்திரங்களில் ஊற்றி பிரிட்ஜ்ல் வைக்கவும்.
) குறைந்தது 4 மணி நேரம் அல்லது பனக்கோட்ட கெட்டியாகும் வரை பிரிட்ஜ்ல் வைக்கவும் .

) பின்பு பனக்கோட்ட கப்களை , பரிமாறும் தட்டுகளில் தலைகீழாக கமுற்றவும்.
) பனக்கோட்ட தட்டுகளில் விழுந்து விடும் , அவ்வளவுதான் சுவைத்து மகிழுங்கள் .

குறிப்பு :
) பாகு காய்ச்சும் பொழுது கவனம் தேவை , குறைத்த சூட்டில் , கிளறாமல் கொதிக்கவிடவேண்டும் .
) நன்கு பழுத்த பழங்கள் நன்றாக இருக்கும்                     

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...