Wednesday 10 January 2018

நிம்பு பாணி / லெமனேட்


நிம்பு பாணி / லெமனேட்

Posted in : JUICES AND DRINKS on by : Saranya Arun Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK HERE

வணக்கம் ,

நிம்பு பாணி / லெமனேட்..மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது , இனி வரும் இரண்டு மாதம் சமாளிப்பது பெரும் கஷ்டம் .
வீட்டில் அனைவர்க்கும் உணவின் மேல் இருந்த ஆர்வம் குறைத்து இப்பொழுது பழங்கள் மற்றும் குளிர் பானங்கள் மேல் ஆர்வம் அதிகமாகிவிட்டது.
அதனால் பிரிட்ஜ் முழுவதும் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் தான்.
இந்த நிம்பு பாணி எனப்படும் ஒரு வகையான எலுமிச்சை பானம் நான் அதிகஅளவில் செய்வேன்.இரண்டு நாட்கள் வரும் அளவு செய்து பிரிட்ஜ்ல் வைத்து விடுவேன்.அவ்வப்போது குடிக்க மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் மிகுந்த புச்சுணர்ச்சியை கொடுக்கும்.
பலூடா / சபிஜ விதை கிடைத்தால் கண்டிப்பாக இந்த பானத்துடன் சேர்த்துக்கொள்ளுங்கள் ,ஏன்னென்றால் இந்த விதை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை கொடுக்கும் , அதோடு எடை குறைப்பிற்கு , ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
தேவையானவை :
தண்ணீர் – 3 கப்.
எலுமிச்சை – 2 .
சர்க்கரை – 7 தேக்கரண்டி .
கல் உப்பு – 1 / 4 தேக்கரண்டி .
மிளகு தூள் – 1 / 4 தேக்கரண்டி.
சீரகம் – 1 / 4 தேக்கரண்டி.
பலூடா / சபிஜ விதை /SABJA – 1 / 4 தேக்கரண்டி.
புதினா சிறிது.
செய்முறை :

) சீரகத்தை தனியாக வறுத்து , பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
) சபிஜ / SABJA விதைகளை 15 நிமிடம் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.ஊறினால் இந்த விதைகள் இருமடங்கு பெரிதாகிவிடும்.

) பாத்திரத்தில் தண்ணீர் , சர்க்கரை சேர்த்து நன்றாக கலங்கும்படி கலக்கவும்.

) அத்துடன் எலுமிச்சை சாறு , சீராக போடி , மிளகு தூள் , உப்பு சேர்த்து கலக்கவும்.

) நேரம் இருந்தால் இந்த கலவையை 30 நிமிடம் பிரிட்ஜ்ல் வைக்கலாம் , இதனால் சேர்க்கும் பொருட்கள் நன்றாக ஊறி சுவை கூடும்.
) பானத்தை க்ளாசில் ஊற்றி சபிஜ விதைகளையும் , புதினாவையும் தூவி பரிமாறவும்.             

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...