கொத்தமல்லி சாதம்
Posted in : BRIYANI AND FRIED RICE, RICE RECIPES, VARIETY RICE on by : Saranya Arun Tags: CORIANDER RECIPES, CORIANDER RICE, EASY COOKING, LUNCH BOX RECIPES, LUNCH RECIPESTO VIEW IN ENGLISH : CLICK HERE
வணக்கம் ,கொத்தமல்லி சாதம்!! ஆரோகியமான ,சுவையான மற்றும் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய கொத்தமல்லி சாதம் செய்முறை உங்களுக்காக ..
நான் அடிக்கடி வீட்டில் , மதிய உணவுக்காக இந்த சாதத்தை செய்வேன்.
10 நிமிடத்தில் செய்யக்கூடிய சாதத்தின் செய்முறை கீழே,
தேவையானவை :
அரிசி – 1 கப்.
உப்பு – தேவையான அளவு .
தேங்காய் எண்ணெய் (அ) நெய் – 3 தேக்கரண்டி .
கடுகு – 1 / 4 தேக்கரண்டி .
பிரிஞ்சி இலை – 1 .
பட்டை – 1 ” துண்டு – 1 .
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி .
உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 2 .
அரைப்பதற்கு :
கொத்தமல்லி இலை – 4 கப் .
வெங்காயம் – 1
இஞ்சி – 1 / 2 ” துண்டு -1
பச்சை மிளகாய் – 3
செய்முறை :
அ) அரிசியை நன்றாக அலசி , 2 1 /2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
ஆ ) வெந்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி , 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ஆறவிடவும் .
இ) மல்லி இலையை சுத்தம்செய்து வேர் பகுதியை நீக்கி விடவும் .
ஈ ) அரைக்கும் பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
ஊ ) அத்துடன் கடலை பருப்பு , உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வணக்கவும்.
எ) வணங்கிய பொருட்களுடன் , அரைத்த மல்லி விழுது சேர்த்து , மசாலா கெட்டியாகி , நிறம் மாறும் வரை வேகவிடவும் .
ஐ) அப்பளத்துடன் பரிமாற நன்றாக இருக்கும் .
குறிப்பு :
௧) முந்திரி ,நிலக்கடலை வேண்டுமானால் தாளிக்கும்பொழுது சேர்த்துக்கொள்ளவும்.
௨) சாதத்தை குழைய வேகவைக்கவேண்டாம் , மல்லி மசாலாவுடன் கலக்கும்பொழுது மிகவும் குழைந்துவிடும்.
No comments:
Post a Comment