Tuesday 16 January 2018

ஆந்திரா பருப்பு பொடி

ஆந்திரா பருப்பு பொடி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
ஆந்திரா பருப்பு பொடி !! நாங்கள் சென்னையிலிருந்த பொழுது அங்கே உள்ள ஒரு ஆந்திர மெஸ்ஸில் பருப்பு பொடி அருணுக்கு மிகவும் பிடிக்கும்.நான் பல முறை முயற்சி செய்தும் அந்த சுவை எனக்கு கிடைக்கவில்லை .கடைசியாக இந்த ரெசிபி சரியாக வந்தது , அதே சுவை என்று கணவர் ஒப்புக்கொண்டார்(இறுதியாக!!) .பருப்புப்பொடியை நான் இரண்டு வாரங்களுக்கு மேல் வைப்பதில்லை , பருப்புப்பொடி மாதத்திற்கு வைத்தாலும் கெட்டுப்போகாது ஆனால் எனக்கு அவ்வப்போது அரைக்கும் பருப்பு பொடியின் மணம் பிடிக்கும் என்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அரைத்துவைத்துக்கொள்வேன்.
சுவையான ஆந்திர பருப்பு பொடி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துவரம் பருப்பு – 3/4 கப்.
பொட்டுக்கடலை / உடைத்தக்கடலை – 1/2 கப்
பூண்டு – 5 பல்
சீரகம் -1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 6
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி .
கருவேப்பில்லை ஒரு கொத்து
உப்பு தேவையானஅளவு
நெய் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை :

) எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் பருப்பு , கடலை , பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக குறைந்த சூட்டில் பொன்னிறமாக ,மணம் வரும்வரை வறுத்துவைத்துக்கொள்ளவும்.
) பின்பு சீரகம் மற்றும் கருவேப்பில்லை ஒன்றாக பொன்னிறமாக வறுத்துவைத்துக்கொள்ளவும்.

) வாணலியில் நெய் சேர்த்து வரமிளகாய்ஐ நெய்யில் வறுத்து , அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் .

) மேலே வறுத்த அனைத்து பொருட்கள் மற்றும் உப்பு , பொருங்காயம் அனைத்தையும் வரமிளகாயுடன் சேர்த்து கலக்கி ஆறவிடவும்.

) அறியபின்பு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .

) சூடான சாதத்திற்கு , நெய்யுடன் பரிமாற சுவையாக இருக்கும் . 
குறிப்பு :
) எப்பொழுதும் குறைத்த சூட்டில் வறுக்கவும் , இதனால் சுவை கூடுவதுடன் , சமமாக வறுக்கஇயலும்.
) நெய்க்கு பதிலாக வெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...