Friday 12 January 2018

குல்பி (சுலபமான முறை)

குல்பி (சுலபமான முறை)


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
குல்பி (சுலபமான முறை) ,குல்பி பாரம்பரிய முறைப்படி செய்வது மிகவும் சுவையாக இருக்கும்.ஆனால் அதற்கு அதிக நேரம் எடுக்கும் , இந்த முறை குல்பி செய்வது மிகவும் சுலபம் , செய்யும் நேரம் குறைவு.
பாரம்பரிய முறைப்படி செய்முறை பின்னர் போஸ்ட் செய்கிறேன் ,
இப்பொழுது சுலபமான முறை உங்களுக்காக ,
தேவையானவை :
முழு கொழுப்பு பால் – 1/2 லிட்டர்.
ஏலம் – 2
பொடிசெய்த நட்ஸ் -2 மேஜைக்கரண்டி
நறுக்கிய நட்ஸ் – 2 தேக்கரண்டி .
சர்க்கரை – 2 மேஜைக்கரண்டி
விப்பேட் கிரீம் – 2 மேஜைக்கரண்டி
விப்பிங் கிரீம் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
அ) பாலை நன்றாக காய்ச்சி பொங்கவிடவும் , பின்னர் நெருப்பை குறைத்து , குறைத்த சூட்டில் பாலை சுண்டவைக்கவும்.பால் அடிபிடிக்காமல் இருக்க இடையில் கிளறிக்கொண்டே இருக்கவும் .

ஆ) பால் பாதியாக குறைந்தவுடன் ,சர்க்கரை , பொடித்த ஏலம் ,பொடி செய்த நட்ஸை சேர்த்து கொதிக்கவைக்கவும் .

இ) பால் நன்றாக சுண்டி 1 / 4 பங்கானப்பிறகு , விப்பிங் கிரீமை சேர்த்து கலக்கவும் .
ஈ) பால் குழம்பு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.

உ) ஆறியபிறகு நறுக்கிவைத்துள்ள நட்ஸில் பாதியையும் , விப்பேட் கிரீமையும் சேர்த்து கலக்கி , கப்பில் ஊற்றி பிரீஸிரில் 8 மணிநேரம் அல்லது கெட்டியாகும் வரை வைக்கவும் .

 ஊ) பின்னர் கப்களை தண்ணீரில் ஒரு நிமிடம் மூழ்கவைத்து எடுத்து , குல்பிகளை வெளியே எடுக்கவும் .தண்ணீரில் முல்கிவைப்பதால் குல்பி சுலபமாக வெளியே வரும் .
எ) மீதியிருக்கும் நட்ஸை தூவி சுவைக்கவும் .



No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...