Friday 5 January 2018

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட் ! நான் இப்பொழுதெல்லாம் சீக்கிரம் செய்யக்கூடிய காலை உணவுகள் பல செய்கிறேன்.

சிலநாட்களுக்கு முன்பு காலையில் எழுவத்திற்கு நேரமாகிவிட்டது , எனது மகளின் பள்ளி ஆரம்பிப்பதற்கு அரைமணிநேரம் முன்புதான் எழுந்தேன்.
அதனால் சீக்கிரம் செய்யக்கூடிய இந்த பிரட் டோஸ்ட் செய்தேன்,20 நிமிடத்தில் செய்துவிட்டேன்.
சுலபமான ,சீக்கிரம் செய்யக்கூடிய பிரட் டோஸ்ட் செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 20 நிமிடங்கள்.
நபர்கள் : 2 .
தேவையானவை:
பிரட் துண்டு – 4 துண்டுகள்
உருளைக்கிழங்கு -2
வெங்காயம் -1
பச்சை மிளகாய் – 2
குடை மிளகாய் – 1
உப்பு – தேவையானஅளவு
நெய் -2 தேக்கரண்டி
கடுகு – 1/8தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/8 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
மல்லியிலை – சிறிது
செய்முறை :
அ) உருளைக்கிழங்கை குக்கர்இல் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து ,1 தேக்கரண்டி உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
ஆ) வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து ,நன்றாக மசித்துக்கொள்ளவும்.

இ) வெங்காயம் ,குடை மிளகாய் , மிளகாய் ,கருவேப்பிலை , மல்லி ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஈ) கடாயில் 1 தேக்கரண்டி நெய் சூடாக்கி , கடுகு ,பச்சை மிளகாய் ,வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

உ) இத்துடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து ,மஞ்சள் தூள் , மிளகாய் தூள்,கருவேப்பிலை , மல்லியிலை ,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஊ) தோசை கல்லை சூடாக்கி , நெய் தடவி ,பிரட் துண்டை வைத்து ,அதன் மேல் 2 தேக்கரண்டி உருளைக்கிழங்கு மசியலை வைத்து சமமாக தடவவும்.

எ) மேலே நெய் தடவி , 30 நொடிகள் வேகவிட்டு , திருப்பிப்போட்டு 30 நொடிகள் வேகவிட்டு , கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...