Wednesday 10 January 2018

கடலை பருப்பு சட்னி


 கடலை பருப்பு சட்னி

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சென்ற வாரம் , எனது வீட்டில் சட்னி செய்வதற்கு ஒன்றுமே இல்லை , ஒரு சிறிய தக்காளி ,மற்றும் சில பூண்டு மட்டுமே இருந்தது .அதனால் கடலை பருப்பு சட்னி செய்தேன் .
மிகவும் சுலபமான சட்னி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி .
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி .
தக்காளி – 1 சிறியது .
பூண்டு – 4 பல்.
வரமிளகாய் – 2 .
உப்பு தேவையானவை .
பெருங்காயப்பொடி – 1 / 8 தேக்கரண்டி .
தேங்காய் – 2 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
தாளிப்பதற்கு :
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு – 1 / 8 தேக்கரண்டி .
கருவேப்பில்லை சிறிது .
உளுந்தம் பருப்பு – 1 / 2 தேக்கரண்டி .
வரமிளகாய் – 1 .
செய்முறை :

) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடலை பருப்பு , உளுந்தம் பருப்பு,வரமிளகாய் , பூண்டு சேர்த்து , குறைந்த சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.


) இறுதியாக பெருங்காயப்பொடி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

) வாணலியில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


) முதலில் பருப்பு கலவையை கரகரப்பாக அரைக்கவும்.அத்துடன் வதக்கிய தக்காளியை சேர்த்து அரைக்கவும்.

) மிகவும் மைய அரைக்காமல் சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பில்லை , உளுந்தம் பருப்பு , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து சட்னியுடன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
 
குறிப்பு :
) குறைந்த சூட்டில் எப்பொழுதும் வறுக்கவேண்டும்.
) தக்காளிக்கு பதில் புளியும் சேர்க்கலாம்.
) தேங்காய் சேர்ப்பதாக இருந்தால் ,அரைக்கும் பொழுது சேர்க்கலாம்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...