Wednesday 10 January 2018

பானகம்

 பானகம்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பானகம் எங்களது கோவில்களில் சித்திரை கனி () சித்திரை திருநாள் அன்று தீர்த்தமாக கொடுப்பார்கள் .சித்திரை மாதத்தில் வாட்டும் கடும் வெய்யிலை சமாளிக்க நாம் அதிக அளவில் தண்ணீர் எடுக்கவேண்டியது அவசியம் .மேலும் உடலில் தண்ணீர் வற்றாமல் இருக்க பானகம் மிகவும் உதவியாக இருக்கும்.
நாங்கள் சித்திரை கனி அன்று நாங்கள் பழங்கள் சாலட் , காய்கள் சாலட் , நீர் மோர் மற்றும் பானகம் ஆகியவற்றை இறைவனுக்கு படைப்போம் .
அனைத்து செய்முறைகளையும் தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இன்று பானகம் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தண்ணீர் – 2 கப்.
வெல்லம் – 1 / 2 கப்.
ஏலம் – 2 .
இஞ்சி – 1 / 4 தேக்கரண்டி .
உப்பு ஒரு துளி .
சாதிக்காய் போடி ஒரு துளி .
எலுமிச்சை – 1 / 2 மூடி .
துளசி இலைசிறிய அளவு .
செய்முறை :

) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் , வெல்லம் , ஏலம் , சாதிக்காய் பொடி சேர்த்து ஒரு மணிநேரம் அல்லது வெல்லம் கரையும்வரை ஊறவைக்கவும்.


) வெல்லம் கரைந்தபிறகு தட்டிய இஞ்சி , எலுமிச்சை சாறு ,துளசி சேர்த்து கலக்கி பருகவும்.

) பிரிட்ஜ்ல் ஒரு நாள் வைத்தும் பருகலாம்.

) இஞ்சிக்கு பதில் சுக்கு பொடியும் சேர்க்கலாம்.     

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...