Tuesday 9 January 2018

மாம்பழ ரவா கேக் ( முட்டையில்லாமல்)

மாம்பழ ரவா கேக் ( முட்டையில்லாமல்)

Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
இந்த வருடம் எனது பிறந்தநாளுக்கு நானே கேக் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.அதனால் எதாவது சற்று ஆரோக்கியமாக செய்யலாம் என்று ரவா கேக் செய்தேன் , இப்பொழுது மாம்பழ சீசன் என்பதால் ரவா மாம்பழ கேக் செய்தேன்.மேலும் முதல்முறையாக மாம்பழ ஜெனாச்சே செய்து கேக்ஐ ஜொலிக்கவைத்தேன்🙂 .அத்துடன் வெண்ணைகிரீம் மேலே வைத்து சுவையை கூட்டிவிட்டேன்.எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது , பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும் செய்வது மிகவும் எளிது.நான் வெள்ளை சர்க்கரை சேர்த்தேன் , நீங்கள் கரும்பு சர்க்கரை சேர்த்து இன்னும் சத்தாக்கிக்கொள்ளலாம்.
சுவையான , சத்தான ,மாம்பழ ரவா கேக் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ரவா – 2கப் / 360கிராம்.
மாம்பழ கூல் -1 1/2 கப்
வெண்ணை – 1/2 கப் /100 கிராம் ( மெருதுவாக இருக்கவேண்டும்)
சர்க்கரை – 1 1/2கப் / 320 கிராம்
பேக்கிங் பவுடர் -2 தேக்கரண்டி
ஏலம் -5

மைதா -1 தேக்கரண்டி
செய்முறை :

) ஓவென்ஐ 170 ” சி – 35 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்.
பேக்கிங் தட்டில் , வெண்ணை தடவி , மாவு தூவி தனியே வைக்கவும்.

) சர்க்கரை பெரியதரியாக இருந்தால் அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் ரவா , சர்க்கரை , பொடித்த ஏலம் , பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

) அத்துடன்  வெண்ணை சேர்த்து கலக்கி , மாம்பழ கூல் ஊற்றி நன்றாக கலக்கவும்.கலவை ஒரு 15 நிமிடம் ஊறவேண்டும் .



) 15 நிமிடத்திற்கு பிறகு , கேக் கலவையை பேக்கிங் தட்டில் ஊற்றி 35 நிமிடம் வேகவிடவும்.ஒரு கத்தியை கேக் நடுவே செலுத்தினால் ஒட்டாமல் ,சுத்தமாக வரவேண்டும்.

) வெந்த கேக்ஐ வெளியே எடுத்து , ஆறவிட்டு , பிறகு பேக்கிங் தட்டில் இருந்து எடுத்து ஒரு 30 நிமிடம் நன்றாக ஆறவிடவும்.

) கேக்ஐ வெட்டி சுவைக்கலாம் , அல்லது ஜெனாச்சே மேலே ஊற்றியும் சுவைக்கலாம்.
ஜெனாச்சே செய்முறை :
தேவையானவை :
ஜெலட்டின் – 1 மேஜைக்கரண்டி.
மாம்பழ கூல் -1/2 கப்
சர்க்கரை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 150 மில்லி.
செய்முறை :
) பாத்திரத்தில் தண்ணீர் , சர்க்கரை சேர்த்து ,சர்க்கரை கலங்கும்வரை கொதிக்கவிடவும்.

) அத்துடன் ஜெலட்டின் சேர்த்து ,நன்றாக கலங்கும்வரை கலக்கவும் .
) பின்னர் மாம்பழ கூல் சேர்த்து  கலக்கி , ஆறவிடவும்.


) ஆரிய பின்னர் கேக்இன் மேல் இந்த ஜெனாச்சேஐ சமமாக ஊற்றவும் ( கரண்டியால் தடவாதீர்கள்) .

) கேக்ஐ பிரிட்ஜ்ல் ஒரு அரைமணிநேரம் ஜெனாச்சே கெட்டியாகும் வரை வைத்து , வெட்டி சுவைக்கலாம் .

) நான் அதன் மேல் வெண்ணைகிரீம் வைத்தேன் , நீங்கள் வெண்ணைகிரீம் வைக்காமலும் சுவைக்கலாம். அனால் வெண்ணைகிரீம் , மாம்பழ காம்பினேஷன் நன்றாக இருந்தது.

குறிப்பு :
) மாம்பழ கூல் தண்ணீராகவும் இல்லாமல் அதிக கெட்டியாகவும் இல்லாமல் கிரீம் போல் இருக்கவேண்டும்.தண்ணீராக இருந்தால் ரவையுடன் கலக்கிபின்பு அதிகநேரம் வைத்திடுங்கள் , இதனால் ரவை தண்ணீரை உறிஞ்சிவிடும்.
) மாம்பழ கூல் கெட்டியாக இருந்தால் , சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...