Wednesday 10 January 2018

முள்ளங்கிசட்னி

 முள்ளங்கிசட்னி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
முள்ளங்கிசட்னி ! பெரும்பாலான காய்களில் நாம் சட்னி அரைக்கலாம் .
காய்கள் சட்னி செய்வதற்கும் மிகவும் சுலபம் , சத்தானது மேலும் சுவையானது.
இந்த சட்னி இட்லி , தோசை ,சப்பாத்தியுடன் சுவைக்க நன்றாக இருக்கும்.
சுவையான முள்ளங்கி சட்னி செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 20 நிமிடம் .
நபர்கள் : 2
தேவையானவை :
முள்ளங்கி – 1கப்
கடலை பருப்பு – 1தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 2
தேங்காய் -1 தேக்கரண்டி
புளி – 1துண்டு
உப்பு தேவையானளவு
எண்ணெய் -2 தேக்கரண்டி .
செய்முறை :
) முள்ளங்கி தோல் சீவி , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

) வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி , நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து குறைந்த சூட்டில் பச்சை வாடை நீங்கி , பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
) வதங்கிய முள்ளங்கியை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு , அதே வாணலியில் மீதமிருக்கும் ஒரு கரண்டி எண்ணையை சேர்த்து , கடலை பருப்பு ,உளுந்தம் பருப்பு , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

) வறுத்த பொருட்கள் அனைத்தையும் முள்ளங்கியுடன் சேர்த்து , உப்பு , புளி சேர்த்து ,மைய அரைத்துக்கொள்ளவும்.

) இட்லி , தோசை , சப்பாத்தியுடன் பரிமாறலாம்..       

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...