Thursday 11 January 2018

ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி

ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி

Posted in : BRIYANI AND FRIED RICE on by : Saranya Arun Tags: , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
ஆம்பூர் தம் பிரியாணி !! மிகவும் குறைந்த பொருட்களை வைத்து எளிமையாக செய்யும் பிரியாணி ஆனால் சுவையும் , மணமும் வீடு முழுவதும் பரவியிருக்கும்.
நான் இதற்கு முன்னாள் இரண்டு முறை தம் பிரியாணி முயற்சி செய்துள்ளேன் ஆனால் திருப்தியாக இல்லை , காரணம் சரியான பாத்திரம் இல்லாததுதான் .இம்முறை பொள்ளாச்சி சென்றிந்த பொழுது இந்த பாத்திரத்தை எடுத்து வந்தேன் , கனமான பாத்திரம் தம் பிரியாணி செய்வதற்கு ஏற்றதாகும்.
நான் இந்த பாரம்பரிய பிரியாணி முறையை ஒரு காணொளியில் கண்டேன் , ஆம்பூரில் இருந்த ஒரு பாரம்பரிய சமையல் கலை நிபுணர் செய்து காட்டினார் . ஆம்பூர் பிரியாணி செய்வதற்கு சீராக சம்பா அரிசி உபயோகப்படுத்தப்படுகிறது , காரணம் அது சீரணத்திற்கு மிகவும் நல்லது என்பதால்.மிகவும் எளிதாக குறைந்த பொருட்களை வைத்து செய்தார் .
சுலபமான , அருமனையான ஆம்பூர் பிரியாணி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சீராக சம்பா அரிசி – 2 கப்.
சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம் – 1( பெரியது ).
வர மிளகாய் – 8
இஞ்சி விழுது – 2தேக்கரண்டி .
பூண்டு விழுது -2 தேக்கரண்டி
தயிர் – 1/2கப்
நெய் ( அல்லது ) எண்ணெய் – 5தேக்கரண்டி
எலுமிச்சை – 1/2 மூடி
மல்லி இலை – 1/2 கப்
புதினா இலை – 1/2 கப்.
பட்டை – 5
கிராம்பு -12
ஏலம் – 2
தண்ணீர் – 6கப் +1 கப்.
உப்பு தேவையானஅளவு
செய்முறை :
) வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
) மிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

) ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் கொதிக்கவைக்கவும் , அத்துடன் கழுவிய அரிசி ,உப்பு சேர்த்து 90 % வேகும் வரை வேகவிடவும்.அரிசியை விரல்களால் நசுக்கினால் சிறிது குருணையாக இருக்கவேண்டும் ஆனால் நசுங்கிவிடும்.இந்த பக்குவத்தில் தண்ணீர் வடித்து அரிசியை தனியே வைக்கவும்.
) கனமான பாத்திரத்தில் எண்ணையை சூடாக்கி , அதில் பட்டை ,கிராம்பு , ஏலம் ,1 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் சேர்த்து குறைந்த சூட்டில் பொன்னிறமாக வதக்கவும்.

) அத்துடன் பூண்டு விழுது சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிய பின்பு , இஞ்சி விழுது , மல்லி இலை , புதினா இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

) பின்பு மிளகாய் விழுது , மீதமிருக்கும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போய் , எண்ணெய் திரண்டு வரும்வரை வதக்கவும் .
) நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ,சிக்கன் ,உப்பு சேர்த்து ,தயிர் ,1 /2 கப் சூடான தண்ணீர் சேர்த்து , வேகவிடவும் .சிக்கன் வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் .


) இப்பொழுது வெந்த சாதத்தை சேர்த்து , கிளறி ,மூடிவைக்கவும் ( அரிசி சேர்த்தபின்பு மிகவும் கெட்டியாக இருந்தால் 1 / 2 கப் சுடுதண்ணீர் சேர்க்கலாம் ) .ஆவி வெளியே போகாமல் இருக்க மூடியின் மேல் கனமான தண்ணீர் பாத்திரத்தை வைக்கவும்.

) தோசை கல்லை சூடாக்கி , அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து குறைத்த சூட்டில் 20 நிமிடம் வேகவிடவும் .

) 20 நிமிடத்திற்கு பிறகு , பாத்திரத்தை திறந்து சாதம் நன்றாக வெந்துஉள்ளதா என்று பார்த்து இல்லையென்றால் ஒரு கிளறு கிளறி மீதும் ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் ( இவ்வாறு கிளறுவதால் அடிப்பாகம் குழைந்து  போகாமல் இருக்கும் ).

ஓஓ) பிரியாணி வெந்தவுடன் ஒரு முறை கிளறி சூடாக பரிமாறவும்.

ஒவ்) நான் சிக்கன் சுக்கா , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடியுடன் பரிமாறினேன்.


No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...