Friday 5 January 2018

பேலியோ சாண்ட்விச் பிரட்

பேலியோ சாண்ட்விச் பிரட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பேலியோ சாண்ட்விச் பிரட் ! எனக்கு பேலியோவில் மிகவும் பிடித்த உணவு இந்த ரொட்டியாகும்.சீக்கிரம் செய்துவிடலாம் , மேலும் சத்தானது , சுவையானதும்கூட.
பேலியோ டயட் அல்லாது அனைவரும் சாப்பிட ஏற்றது .
சுவையான , சத்தான 1 நிமிட மைக்ரோவேவ் ( நுண்ணலை அடுப்பு) சாண்ட்விச் ரொட்டி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பிரட் செய்வதற்கு :
பாதாம் பொடி – 1/3 கப்.
முட்டை – 1
பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி .
உப்பு -1/8 தேக்கரண்டி .
சாண்ட்விச் செய்வதற்கு :
தக்காளி – 1.
வெங்காயம் -1.
வெள்ளரி – 1/2.
சீஸ் – 2 தேக்கரண்டி
வெண்ணை – 1தேக்கரண்டி
செய்முறை :

அ) மைக்ரோவேவ் கப்பில் பாதாம் பொடி , உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஆ) அத்துடன் ஒரு முட்டை சேர்த்து கலக்கவும்.

இ) மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து 1 நிமிடம் அதிக சூட்டில் வேகவிடவும் , ஒரு குச்சியை கப்பின் நடுவே செலுத்தினால் அது ஒட்டாமல் வரவேண்டும்.
ஈ) பிரட் வெந்தவுடன் , அடுப்பில் இருந்து எடுத்து , ஆறவிட்டு , துண்டுகளாக்கவும்.
சாண்ட்விச் செய்வதற்கு :
அ) தோசை கல்லை சூடாக்கி , வெண்ணை தேய்த்து , ரொட்டி துண்டுகளை வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
ஆ) சுட்ட ரொட்டி மேல் சீஸ் ,நறுக்கிய தக்காளி , வெங்காயம் , வெள்ளரி வைத்து , மேலே ரொட்டி வைத்து மூடி சுவைக்கவும்.

குறிப்பு :
அ) ஈரப்பதம் இல்லாத பாதாமை பொடியாக அரைத்துக்கொள்ளவும் .
ஆ) காய்களுக்கு பதில் சிக்கன் அல்லது உங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சேர்க்கலாம்.
இ) ரொட்டியுடன் சீஸ் சுவையாக இருக்கும் , அதனால் சீஸ் நிச்சயமாக சேர்க்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...