Saturday 6 January 2018

ரெட் வெல்வெட் கேக்

ரெட் வெல்வெட் கேக்


TO VIEW THE RECIPE IN ENGLISH PLS CLICK HERE
வணக்கம்,
ரெட் வெல்வெட் கேக்!! காதலர் தின ஸ்பெஷல் .இந்த கேக் ரெசிபிஐ நான் பெப்ரவரி -14 போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன் அனால் முதல் முறை முயன்ற பொது கேக் சொதப்பி விட்டது.அதனால் மறுமுறை வாலெண்டின்ஸ் டே அன்று முயற்சி செய்து வெற்றி அடைந்தேன்.
ரெசிபியில் கொடுக்கப்பட்டதை அப்படியே பின்பற்றினால் சுவையான ரெட் வெல்வெட் கேக் நீங்களே வீட்டில் எளிதாக செய்யலாம் .
நான் இந்த ரெசிபி floursandfrosting .com மற்றும் joyofbaking ,ஆகிய இரண்டு தளங்களில் இருத்து கற்றேன்.

தேவையானவை :
மைதா – 125 gms / 1 1/4 கப்.
கோகோ பவுடர் – 2 டேப்ளேஸ்பூன்.
உப்பு – 1/4 டீஸ்பூன்.
வெண்ணெய் – 60 gms / சுமார் 1/3 கப்.
சர்க்கரை – 150 gms / 3/4 கப்.
முட்டை – 2.
வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.
மோர் – 1/2 கப் / 120 ml.
சிவப்பு நிற லரிங் – 2 டீஸ்பூன்.
வினிகர் – 1 டீஸ்பூன்.
சமையல் சோடா – 1 டீஸ்பூன்.
செய்முறை :

) ஓவென் 170 ” – 30 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யவும்.
) தங்களது பேக்கிங் பான் இ ,வெண்ணை தடவி , மைதாவால் மெலிதாக பூசிவைக்கவும்.

) ஒரு பாத்திரத்தில் மைதா ,உப்பு ,கோகோ பவுடர் ஆகியவற்றை நன்றாக கலக்கவும் ( முடிந்தால் ஜல்லடையில் சலித்துக்கொள்ளவும்).


) மற்றொரு பாத்திரத்தில் மோர் மற்றும் சிவப்பு நிற லரிங்கை கலக்கிவைத்து கொள்ளவும்.

) வெண்ணையை நன்றாக மையை அடித்துக்கொள்ளவும் , அதனுடன் சர்க்கரை ,வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து , சர்க்கரை நன்றாக கலங்கும்படி அடிக்கவும்.


) பின்பு இந்த கலவையுடன் முட்டை ஒவ்வென்றாக சேர்த்து நன்றா அடித்துக்கொள்ளவும்.


) இப்பொழுது இந்த முட்டை கலவையுடன் 1 /4 பங்கு மோர் கலவை மற்றும் 1 /4 பங்கு மைதா கலவை சேர்த்து நன்றாக கலக்கவும்.


) இதே போல் மோர் மற்றும் மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

) ஒரு சிறு பாத்திரத்தில் வினிகர் மற்றும் சமையல் சோடாவை சேர்த்து கலந்தால் நுரையுடன் ஒரு கலவை கிடைக்கும்.இந்த நுரை கலவையை நமது கேக் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.



௧௦) கலவையை பேக்கிங் பானில் ஊற்றி ஓவென்இல் வைத்து 30 நிமிடம் அல்லது ஒரு மெலிய மர குச்சியை கேக்கின் நடுவில் செலுத்தினால் அதில் எந்த ஈர பசையும் இல்லாமல் வெளியே வரும் வரை வேகவிடவும்.


௧௧) கேக்ஐ  ஓவென்இல் இருந்து வெளியே எடுத்து நன்றாகியே ஆறவிடவும்.

௧௩) பின்பு கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் (ரெசிபி விரைவில்) செய்து பரிமாறவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...