Tuesday, 9 January 2018

சாக்லேட் விப்பேட் கிரீம்

சாக்லேட் விப்பேட் கிரீம்

Comments : 1 Posted in : BASIC RECIPES on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
நான் மிக்ஸியில் விப்பேட் கிரீம் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் .சமீபத்தில் ஒரு நாள் எனது பீட்டர் ஒடைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் மிக்ஸியில் விப்பேட் கிரீம் முயற்சி செய்தேன்.
மிக்ஸியில் செய்வது மிகவும் எளிதாக ,மற்றும் குறைத்த நேரத்தில் செய்யமுடிந்தது.நான் இந்த விப்பேட் கிரீமை ரம் சாக்லேட் கேக் மேல் தடவுவதற்காக செய்தேன் .
எளிதான சாக்லேட் விப்பேட் கிரீம் செய்முறை கீழே ,
தேவையானவை :
விப்பிங் கிரீம் – 1 கப் + 2 தேக்கரண்டி .
கோகோ பவுடர் – 4 தேக்கரண்டி .
செய்முறை :
அ) மிக்ஸியில் 2 தேக்கரண்டி விப்பிங் கிரீம் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து அரை நொடி சுற்றவும் . இதனால் கோகோ பவுடர் கிரீமுடன் நன்றாக கலந்துவிடும் .

ஆ) இத்துடன் மீதமிருக்கும் கிரீமை சேர்த்து அதிகமான வேகத்தில் சுற்றவும்.

இ) ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை நிறுத்தி கிரீம் கெட்டியான பதத்திற்கு வந்துவிட்டதா என்று கவனித்து கொள்ளவும் .

ஈ) கிரீம் படத்தில் உள்ளது போல் கெட்டியாகி விட்டால் அடிப்பதை நிறுத்தி கேக்கின் மேல் தடவலாம்.

குறிப்பு :
அ ) நான் நான்-டைரி விப்பேட் கிரீம் உபயோகித்தால் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவில்லை . நீங்கள் சாதாரண கிரீம் உபயோகித்தால் 4 தேக்கரண்டி சர்க்கரை ,1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக்கொள்ளவும் .


No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...