Friday, 12 January 2018

பாரம்பரிய ரோஸ் குல்பி

பாரம்பரிய ரோஸ் குல்பி

Posted in : JELLIES AND PUDDINGS on by : Saranya Arun Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பாரம்பரிய ரோஸ் குல்பி! நான் எளியமுறை குல்பி செய்முறை முப்பே போஸ்ட் செய்துள்ளேன்.இது பாரம்பரிய முறைப்படி செய்யும் குல்பி , கிரீம் சேர்த்து செய்யும் குல்பி சுவைக்க நன்றாக இருந்தாலும் இந்த பாரம்பரிய முறைப்படி செய்யும் குல்பியின் சுவைக்கு ஈடாகாது.
செய்முறை உங்களுக்காக கிழே ,
தேவையானவை :
பால் – 1லிட்டர்
சர்க்கரை – 5தேக்கரண்டி
ஏலம் – 3
பாதாம் – 2தேக்கரண்டி
பிஸ்தா -2 தேக்கரண்டி
சோளமாவு (கார்ன்மாவு) – 1தேக்கரண்டி
கொண்டென்ஸ்ட் மில்க் – 2தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் -1 தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் -1/8 தேக்கரண்டி
செய்முறை :
) பால் பொங்கும் வரை காய்ச்சவும், பிறகு குறைந்த சூட்டில் பாதியாகும் வரை கொதிக்கவிடவும்.

) பால் சுண்டும் நேரத்தில் , பாதாம் , பிஸ்தா ஆகியவற்றை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) ஏலம் பொடிசெய்துகொள்ளவும்.
) சோளமாவை 1 தேக்கரண்டி பாலில் கறைத்துவைத்துக்கொள்ளவும்.

) பால் பாதியாக சுண்டியவுடன் , சோளமாவு கலவை , சர்க்கரை , கொண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து , கிளறிக்கொண்டே இருக்கவும்.

) பால் கெட்டியாகி கிரீம் பதத்திற்கு வந்தவுடன் , பொடித்த நட்ஸ் , ஏலம் சேர்த்து கலக்கி இறக்கவும்.

) அத்துடன் ரோஸ் வாட்டர் , எசென்ஸ் சேர்த்து கலக்கி , ஆறவிடவும்.

) ஆறியவுடன் பாத்திரத்தில் ஊற்றி,சிறிது நட்ஸ் மேலே தூவி , பிரிட்ஜ்ல் 8 மணிநேரம் அல்லது குல்பி கெட்டியாகும் வரை வைக்கவும்.

குறிப்பு :
) பாலை கிரீம் பதத்திற்கு காய்ச்சவும் , அதிகம் கெட்டியாக இருந்தால் பால்கோவா போலிருக்கும் , தண்ணியாக இருந்தால் ஐஸ்கட்டி போலிருக்கும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...