பால் தேங்காய் பருப்பி
TO VIEW IN ENGLISH : CLICK
வணக்கம் ,பால் தேங்காய் பருப்பி ..
தேங்காய் பருப்பி எப்படி செய்தாலும் சுவை அருமையாக இருக்கும் .
நான் ஏற்கனவே தேங்காய் பருப்பி செய்முறை ஆங்கிலத்தில் போஸ்ட் செய்துள்ளேன் .இது மற்றொரு செய்முறையாகும்.
சீக்கிரம் செய்யக்கூடிய தேங்காய் பருப்பி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துருவிய தேங்காய் – 2 கப்.
பால் – 1 1 / 2 கப் ( கொதித்து ஆறியது ) .
சர்க்கரை – 1 கப்.
ஏலம் – 4 .
நெய் – 3 தேக்கரண்டி .
கண்டென்ஸ்ட் மில்க் – 2 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
முந்திரி , திராட்சை – மேலே தூவுவதற்கு .
சிவப்பு நிறம் – 2 சொட்டு ( தேவையென்றால் ).
செய்முறை :
அ) ஏலத்தை பொடியக்கி கொள்ளவும்.
ஆ) ஒரு தட்டில் நெய் தடவிவைத்து கொள்ளவும்.
இ) வாணலியில் பால் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
ஈ) பால் முழுவதும் சுண்டி ,தேங்காய் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
உ) கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதாக இருந்தால் , இப்பொழுது சேர்த்து ஒரு முறை கலக்கவும்.
ஊ) பின்னர் சர்க்கரை சேர்க்கவும் , சர்க்கரை உருகி மறுபடியும் தேங்காய் கலவை கொதிக்கும்.
எ) சர்க்கரை சுண்டி , தேங்காய் மறுபடியும் கெட்டியாகும் வரை வேகவிடவும்.
குறிப்பு :
அ) இந்த பருப்பி 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஆ)கண்டென்ஸ்ட் மில்க் , கலர் இவையில்லாமலும் பருப்பி அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment