Wednesday 10 January 2018

இஞ்சி துளசி மிட்டாய்


இஞ்சி துளசி மிட்டாய்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
இஞ்சி மிட்டாய் ..சிறுவயதில் நாம் நிச்சயம் இஞ்சி மிட்டாய்ஐ சுவைத்திருப்போம்.இப்பொழுது பாரம்பரிய உணவுகள் பல அழிந்து விட்டது , அதோடு இந்த மிட்டாயும் குறைத்துவிட்டது.
சமீபத்தில் இந்த இஞ்சி மிட்டாய் ரெசிபியை ஒரு காணொலில் கண்டேன் .இஞ்சியுடன் நான் சிறிது துளசி இலைகளையும் சேர்த்து மிட்டாய் செய்துவிட்டேன்.குளிர்காலத்தில் வரும் இருமல் மற்றும் சளி தொல்லைக்கு இந்த மிட்டாய் சிறந்த நிவாரணியாக இருந்தது .
இஞ்சி துளசி மிட்டாய் ரெசிபி உங்களுக்காக ..
தேவையானவை :
இஞ்சி – 4” துண்டு -1
சர்க்கரை – 1 கப் .
துளசி – 1/2 கப்.
தேன் – 3 தேக்கரண்டி
கிராம்பு பொடி -1/4 தேக்கரண்டி .
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி .
சர்க்கரை பொடி – சிறிது
தண்ணீர் – 1 கப்.
செய்முறை :

1) இஞ்சியை தோல் சீவி , நன்றாக மசிய அரைத்துக்கொள்ளவும்.

2) வாணலில் அரைத்த இஞ்சி ,துளசி , தென் , சர்க்கரை ,கிராம்பு போடி , எலுமிச்சை சாறு , தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

3) கருநிறமாகி , கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும்.

4) பட்டர் பேப்பரில் சர்க்கரை பொடி தூவி வெந்த கலவையை சிறிய வட்ட வடிவிலான மிட்டாய்களாக விட்டு , கெட்டியாகும் வரை காயவிடவும் (பிரிட்ஜ் உள்ளேயும் வைக்கலாம ).

5) மிட்டாய் கெட்டியாக காய்ந்தவுடன் , சர்க்கரை பொடி தூவி , டப்பாவில் அடைத்து சுவைக்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...