Friday 5 January 2018

கோதுமை பட்டுரா

கோதுமை பட்டுரா


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
கோதுமை பட்டுரா ! எனது சகோதரி பட்டுரா நன்றாக செய்வார்கள் , நான் பட்டுரா செய்முறையை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் .பட்டுரா மைதா மாவில் தான் செய்வார்கள் ,நான் கோதுமை மாவில் செய்தேன்.
பட்டுரா கடலை கறியுடன் பரிமாறுவார்கள் ,நான் பூண்டு காளான் கறிஉடன் பரிமாறினேன்.
சுவையான கோதுமை பட்டுரா செய்முறை உங்களுக்காக !
எனது மற்ற பூரி ரெசிபிகள் :
அ) கார பூரி.
ஆ) குபூஸ் (தயிர் பூரி).
இ) உப்பு ரொட்டி ( அரிசி பூரி )
நேரம் : 4 மணிநேரம் .
நபர்கள் : 5
தேவையானவை :
கோதுமை மாவு – 2கப்
தயிர் – 3/4 கப்
ரவா – 1/4கப்
சமையல் சோடா -1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு
செய்முறை :

அ) ஒரு பாத்திரத்தில் மாவு , உப்பு , ரவா ,சோடா சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
ஆ) பின்பு அத்துடன் தயிர் சேர்த்து கலக்கவும்.

இ) இப்பொழுது மாவு உதிரி உதிரியாக இருக்கும் , இத்துடன் நெய் , தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான உருண்டை பக்குவத்திற்கு பிசையவும்.
ஈ) சிறிது நெய் மேலே தடவி , 3 மணிநேரம் மூடிவைக்கவும் .
உ) 3 மணிநேரத்திற்கு பிறகு , மாவை சிறு உருண்டைகளாக்கி , சிறிது தடினமான பூரிகளாக தேய்க்கவும்.


ஊ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , பூரிகளை இருபுறமும் உப்புமாறு பொறித்தெடுக்கவும்.

எ) பட்டுரா தயார் …கடலை கறி அல்லது உங்களுக்கு பிடித்தமான காரசாரமான மசாலாவுடன் பரிமாறலாம் . நான் பூண்டு காளான் மசாலாவுடன் பரிமாறினேன்..

குறிப்பு :
அ) சிறிய பட்டுராவாக தேய்க்கவும் , இதனால் எண்ணெய் அதிகமாக உறியாது .
ஆ) தடினமான பட்டுரா நன்றாக உப்பும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...