Friday 5 January 2018

வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை)

வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை)


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை) !
நான் இந்த பான் கேக்ஐ பேலியோ உணவாக எடுத்துக்கொள்வேன்.தமிழ் பேலியோவில் பழம் மற்றும் தேன் உண்ண அனுமதியில்லை , ஆனால் மற்ற பேலியோ குரூப்பில் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.அதனால் நான் எப்பொழுதாவது இந்த பான் கேக் செய்து சாப்பிடுவதுண்டு.
மேலும் இதில் மைதா மற்றும் சோடா சேர்க்காததால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஆரோகியமானது.
வெறும் 3 பொருட்களை கொண்டு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ,சத்தான வாழைப்பழ பான் கேக் செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 15 நிமிடம் .
நபர்கள் : 1 .
செய்முறை மூல காரணம் : gimmedelicious.com
தேவையானவை :
வாழைப்பழம் – 1
முட்டை – 2
பட்டை பொடி – ஒரு சிட்டிகை (தேவையென்றால் சேர்த்துக்கொள்ளலாம் ).
நெய் – 1தேக்கரண்டி
தேன் -1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) வாழைப்பழத்தை தோல் உரித்து , நன்றாக மசித்துக்கொள்ளவும்.
ஆ) அத்துடன் இரண்டு முட்டை சேர்த்து கலக்கவும்.
இ) பட்டை சேர்ப்பதாக இருந்தால் இப்பொழுது சேர்த்து கலக்கிக்கொள்ளலாம்.
ஈ) தோசை கல்லை சூடாக்கி , நெய் தடவி , இந்த மாவை 2 தேக்கரண்டி ஊற்றவும்.

உ) சிறிது நெய் தெளித்து , பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.

ஊ) பின்னர் மெதுவாக திருப்பி , மறுபக்கம் ஒரு நிமிடம் வேக விடவும்.

எ) வெந்தவுடன் தட்டிற்கு மாற்றிவிட்டு , இதே போல் அணைத்து பான் கேக்களையும் சுட்டு எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும்.

ஏ) இறுதியாக தேன் மேலே ஊற்றி ,சுவைக்கவும்.
குறிப்பு :
அ) நன்கு பழுத்த பழங்களை உபயோகிக்கவும் .
ஆ) எந்த ஒரு மாவும் சேர்க்காததால் பான் கேக் மிகவும் மிருதுவாக இருக்கும் ,திருப்பும் பொழுது பிய்ந்துவிடும் அதனால் சிறிய வட்டங்களாக ஊற்றினால் திருப்புவதற்கு சுலபமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...