Wednesday 10 January 2018

நீர் மோர்

நீர் மோர்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
நீர் மோர் !! சித்திரை திருநாள் அன்று பானகத்துடன் நீர் மோரும் படைக்கப்படும் .நான் ஏற்கனவே பானகம் செய்முறை போஸ்ட் செய்துளேன்.
இப்பொழுது நீர் மோர் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தயிர் – 1 கப்.
உப்பு – 1 / 2 தேக்கரண்டி.
இஞ்சி – 1 / 2 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் – 2 .
புதினா -1 தேக்கரண்டி .
கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி .
பெருங்காயம் – 1 / 8 தேக்கரண்டி .
தாளிப்பதற்கு :
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு – 1 / 8 தேக்கரண்டி
கருவேப்பில்லை – 2 தேக்கரண்டி .
செய்முறை :

) தயிரை நன்றாக அடித்து மோர் ஆக்கிக்கொள்ளவும் .
) அத்துடன் பெருங்காயம் ,உப்பு , மசித்த இஞ்சி , நறுக்கிய மல்லி , நறுக்கிய புதினா ,பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும் .

) வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பில்லை சேர்த்து வதக்கி , மோருடன் சேர்த்து கலக்கி அருந்தவும் .
) மோரை பிரிட்ஜ்ல் வைத்தும் அருந்தலாம் .
   

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...