Friday 5 January 2018

சுரனாளி தோசை

சுரனாளி தோசை

Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun Tags: , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சுரனாளி தோசை!! இது ஒரு வகை இனிப்பு தோசை,ஆனால் நான் இனிப்பு கம்மியாக செய்வேன்.தோசை ,இட்லி மாவு இல்லையென்றால் எனக்கு காலை நேர உணவு செய்வது மிகவும் கடினம்.அதனால் எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு தேவையான மாவை அரைத்து வைத்து கொள்வது வழக்கம்.இம்முறை இந்த சுரனாளி தோசை செய்தேன் , மிகவும் மெதுமெதுவென்று , சுவையாக இருந்தது.
நான் வெங்காய சட்னியுடன் பரிமாறினேன் , நீங்கள் உங்களுக்கு விருப்பமான காரமான சட்னியுடன் பரிமாறலாம் .
தேவையானவை :
பச்சரிசி – 2கப்.
அவல் – 1கப்
தேங்காய் – 1 கப்( நறுக்கியது ) .
உப்பு – தேவையான அளவு
நெய் (அல்லது ) எண்ணெய் -1 தேக்கரண்டி .
செய்முறை :

அ) அரிசியை நன்றாக கழுவி , தண்ணீரில் 4 மணிநேரம் ஊறவைக்கவும் .
ஆ) ஊறிய அரிசியுடன் , கழுவிய அவலையும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

இ) தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும் .
ஈ) அரைத்த தேங்காயை மாவுடன் சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .

உ) அரைத்த மாவை 8 மணிநேரம் புளிக்கவிடவும் .

ஊ) மாவு புளித்த பின்பு , உப்பு சேர்த்து கலக்கி , தோசையாக சுட்டு எடுக்கவும் .
எ) தோசை கல்லை சூடாக்கி , சிறிது நெய் தடவி , ஒரு கரண்டி மாவை நடுவில் ஊற்றவும். தேய்க்க வேண்டாம் , மாவை பெரிதாக தேய்த்தால் மெதுமெதுவென்று இருக்காது.


ஏ) சிறிது நெய் தெளித்து , தோசையை மூடி ,4 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிடவும் .

ஐ)தோசை வெந்து , அடிப்பாகம் பொன்னிறமானவுடன் , கல்லில் இருந்து எடுத்து (திருப்ப வேண்டாம் )சூடாக பரிமாறவும்.

ஓ) நான் வெங்காய சட்னியுடன் பரிமாறினேன் , நீங்கள் பூண்டு சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான காரமான சட்னியுடன் பரிமாறலாம் .

குறிப்பு :
அ) மாவை அறைக்கும்பொழுது தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம் , ஊத்தப்பம் போல் இருக்கவேண்டும்.

W3Counter Web Stats

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...