Wednesday 10 January 2018

நொங்கு பாயசம்

நொங்கு பாயசம்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பெங்களூரில் இப்பொழுது அதிகளிடத்தில் நொங்கு விற்பதை கண்டேன்.
சிறுவயதில் கோடை விடுமுறையில் தினமும் எங்கள் தோட்டத்தில்  நாங்கள் நொங்கு சுவைப்போம் .இப்பொழுது இங்கு எல்லா இடங்களிலும் நொங்கு விற்பதை கண்டவுடன் நிறைய வாங்கிவிட்டேன்.
என்ன செய்யலாம் என்று யோசித்தபொழுது எனது அம்மா கொடுத்த புத்தகங்கள் நினைவுக்கு வந்தது .
இந்த முறை விடுமுறையில் ஊருக்கு சென்றுந்தபொழுது எனது அம்மா எனக்கு அவர் 20 வருடங்கங்களாக சேர்த்து வைத்திருந்த சமையல் குறிப்புக்கள் புத்தங்களை கொடுத்தார்.அதில் தேடிய பொழுது இந்த செய்முறை எனக்கு கிடைத்தது.
கோடை வெய்யிலுக்கு மிகவும் ஏற்ற நொங்கு பாயசம் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
நொங்கு – 3 கண்.
பால் – 2 கப் + 1 / 4 கப்.
முந்திரி – 7
கசகசா -1 தேக்கரண்டி.
ஏலம் – 2
சர்க்கரை – 5 தேக்கரண்டி .
செய்முறை :
அ) பாலை நன்றாக பொங்கும் வரை காயவைக்கவும் .

ஆ) அதிலுருந்து ஒரு கால் கப் பாலை எடுத்து அதில் முந்திரி , கசகசாவை ஒரு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

இ) பின்பு ஊறிய பொருட்களை மைய அரைத்துக்கொள்ளவும்.

ஈ) பாலை குறைந்த சூட்டில் பாதியாக குறையும் வரை கொதிக்கவைக்கவும் .
உ) பாதியாக சுண்டிய பாலுடன் , அரைத்த முந்திரி கசகசா விழுது , சர்க்கரை ,ஏலம் சேர்த்து கொதிக்கவைக்கவும் .

ஊ) பால் கொஞ்சம் கெட்டியானவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.


எ)பால் ஆறும் நேரத்தில் நொங்கின் தோல் சீவிவிட்டு , ஒரு நொங்கை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும் , மீதமிருக்கும் நொங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
ஏ) இப்பொழுது ஆறிய பாலுடன் , அரைத்த நொங்கு விழுது சேர்த்து கலக்கவும்.


ஐ) இறுதியாக நறுக்கிய நொங்கு துண்டுகளை சேர்த்து , பிரிட்ஜ்ல் ஒரு மணிநேரம் வைத்து சுவைக்கவும் .


குறிப்பு :
அ) பாயசம் கொஞ்ச நேரம் ஊறினால் தான் நன்றாக இருக்கும் .
ஆ) குளிர்ந்த பாயசம் அருமையாக இருக்கும் , அதனால் பிரிட்ஜ்ல் வைத்த பிறகு சுவைக்கவும் .
இ) நொங்குக்கு பதில் இளநீரும் , இளநீர் வலுக்கலும் சேர்க்கலாம் .

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...