Saturday 6 January 2018

வாழைப்பழ ரொட்டி

 வாழைப்பழ ரொட்டி


TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம்,
வாழைப்பழ ரொட்டி ! வாழைப்பழம் நன்றாக பழுத்து விட்டால் என் வீட்டில் யாரும் சாப்பிடமாட்டார்கள் ,அதனால் என் அம்மா நன்றாக பழுத்த வாழை பழத்தில் வடை செய்வார்கள் அனால் நான் அதில் பிரட் செய்துவிடுவேன் .
வாழை பழம் பிடிக்காத என் கணவருக்கு இந்த பிரட் மிகவும் பிடிக்கும்.
மேலும் இந்த பிரட் செய்வது மிகவும் எளிது , முட்டை தேவையில்லை , நன்றாக அடிக்கவேண்டும் என்ற கவலை இல்லை,கோதுமை மாவில் சுலபமாக சீக்கிரம் செய்யலாம்.
ஆரோகியமான ,சுவையான வாழைப்பழ ரொட்டி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கோதுமை மாவு – 1/2 கப் .
மைதா – 1 கப் .
வாழைப்பழம் அடித்து கூழாக்கியது – 3/4 கப் ( 2 அல்லது 3   பெறிய வாழைப்பழம் போதுமானது ).
சர்க்கரை – 1/2 கப்.
வெண்ணிலா எசென்ஸ்  -1 தேக்கரண்டி .
உப்பு – சிறிது .
பேக்கிங்  பவுடர்  – 1 1/2 தேக்கரண்டி 
உருகிய வெண்ணை  or எண்ணெய் – 1/2 கப்.
செய்முறை :

௧) ஓவென்ஐ 170 ” சி – 30 நிமிடம்  ப்ரீ-ஹீட் செய்யவும்.
௨) கோதுமை மாவு,மைதா, உப்பு , பேக்கிங் பவுடர் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சலித்து கலக்கவும்.


௩) வாழைப்பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.


௪) ஒரு பாத்திரத்தில் சர்க்கரை , வெண்ணை (அ) எண்ணெய் , வெண்ணிலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.


௫) அத்துடன் அடித்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

௬) பின்பு மாவு கலவையை சேர்த்து ஒன்றாக கலங்கும்படி கலக்கவும்.
௭) அத்துடன் வெண்ணை தடவி , மாவு தூவிய பாத்திரத்தில் ஊற்றி 30 நிமிடம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை  பேக் செய்யவும்.

௮) சூடான வாழைப்பழ ரொட்டி சுவையாக இருக்கும் , இறுக்கமான டப்பாவில் அடைத்து 4 நாட்கள் வரை சுவைக்கலாம்.

குறிப்பு :
௧) மைதாவிற்கு பதில் கோதுமை மாவும் சேர்க்கலாம்.
௨) வெண்ணைக்கு பதில் எண்ணையும் சேர்க்கலாம் ,ஆனால் வெண்ணை சுவை நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...