Thursday 11 January 2018

கொண்டக்கடலை குழம்பு


 கொண்டக்கடலை குழம்பு


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
கொண்டக்கடலை குழம்பு ! நான் எப்பொழுதும் வெள்ளை கொண்டக்கடலை அதிகமாக உபயோகிப்பது இல்லை , கருப்பு கொண்டக்கடலை சுவை எங்களுக்கு பிடித்திருப்பதால் இதையே தான் வாங்குவேன்.
கொண்டக்கடலையில் புரதம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.எனது மகள் சுண்டல் சாப்பிடமாட்டாள் அதனால் பெரும்பாலும் குழம்புதான் செய்வேன் .
காரசாரமான கொண்டக்கடலை குழம்பு செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 30நிமிடம்.
நபர்கள் : 2
தேவையானவை :
கொண்டக்கடலை – 1/2கப்
வெங்காயம் – 1
கடுகு – 1/4தேக்கரண்டி
உப்பு – தேவையானவை
மல்லியிலை -2 தேக்கரண்டி
எண்ணெய் -1 தேக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
வறுத்து அரைப்பதற்கு :
வெங்காயம் -1
வர மிளகாய் – 3
பூண்டு – 4
இஞ்சி – 1”
பட்டை – 1
கிராம்பு – 2
சோம்பு – 1தேக்கரண்டி
கசகசா -1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2தேக்கரண்டி
வரமல்லி – 3தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி
வறுத்த கடலை – 1தேக்கரண்டி
தேங்காய் – 3தேக்கரண்டி
எண்ணெய் – 1தேக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
செய்முறை :
அ) கொண்டக்கடலையை 8 மணிநேரம் ஊறவைத்து , குக்கரில் உப்பு , தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.

ஆ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைக்கும் பொருட்களை பின்வருமாறு சேர்க்கவும் – வெங்காயம் , மிளகாய் ,இஞ்சி , பூண்டு , பட்டை , கிராம்பு ,சோம்பு , கசகசா , வரமல்லி , சீரகம் , மஞ்சள் தூள் ,கருவேப்பிலை சேர்த்து ,மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.

இ) மேலேயுள்ள பொருட்கள் வறுத்தவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்த கடலை , தேங்காய் சேர்த்து ஒரு முறை கலக்கவும் ( கடலை , தேங்காய் வறுக்கத்தேவையில்லை).

ஈ) சூடு ஆறியவுடன் வறுத்த பொருட்களை தேவையானளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

உ) பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறிந்தபின் , வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி ,அரைத்த விழுதை சேர்த்து ,ஒரு கொதி விடவும்.

ஊ) குழம்பு கொதிக்காரம்பித்தவுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீருடன் சேர்த்து குழம்பில் ஊற்றி , கெட்டியாகவும் வரை கொதிக்கவிடவும்.

எ) இறுதியாக மல்லியிலை தூவி , அடுப்பில் இருந்து இறக்கி , இட்லி ,தோசை , சப்பாத்தி , ஆப்பம் என்று உங்கள் விருப்பம் போல் பரிமாறவும்.
குறிப்பு :
அ) வரமல்லிக்கு பதில் மல்லிப்பொடியும் சேர்க்கலாம் ,பொடி சேர்ப்பதாக இருந்தால் தேங்காயுடன் சேர்த்து சேர்க்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...