Wednesday 10 January 2018

கேரட் அல்வா

 கேரட் அல்வா


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம்,
கேரட் அல்வா !! இதுவும் எனது வாசகர் கேட்ட ரெசிபியாகும்.ஸ்ரீ வித்யா என்ற வாசகர் இந்த ரெசிபியை சிறிது நாட்களுக்கு முன்னர் கேட்டிருந்தார்.செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் என்னிடம் இருந்ததால் உடனே செய்துவிட்டேன்.
கேரட்உடன் கண்டென்ஸ்ட் மில்க் சிறந்த சுவையாக இருந்தது , தங்களிடம் condensed milk இல்லை என்றால் பரவாயில்லை அல்வா condensed மில்க் இல்லாமலும் சுவையாகத்தான் இருக்கும்.
கேரட் அல்வா ரெசிபி உங்களுக்காக ..
எண்ணிக்கை : 2 கப் அல்வா .
செய்யும் நேரம் : 20 நிமிடம்.
தேவையானவை :
கேரட் – 1 / 4 கிலோ.
பால் – 1 கப் ( காய்ச்சி ஆறவைத்தது).
சர்க்கரை – 1 / 4 கிலோ.
கண்டென்ஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி.
முந்திரி – 5 .
உலர் திராட்சை – 10 .
ஏலம் – 3 .
நெய் – 5 தேக்கரண்டி .
செய்முறை :
௧) கேரட்ஐ மிகவும் மெலிதாக துருவிக்கொள்ளவும்.
௨) ஏலம் பொடியாக்கி கொள்ளவும்.
௩) கடாயில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து முந்திரி , திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி ஒரு தட்டில் வைக்கவும்.


௪) பின்பு அதே வாணலில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து துருவிய கேரட் சேர்த்து குறைந்த சூட்டில் நிறம் மாறும் வரை வதக்கவும்.கேரட் பச்சை வாடை போய், வெண்ணிறமாக மாறும் வரை வதக்கவும்.


௫) பின்பு அத்துடன் பால் சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும்.


௬) கேரட் நன்றாக வெந்து பால் முழுவதும் சுண்டியவுடன் , கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து ஒரு நிமிடம் கிளறிவிடவும்.



௭) அத்துடன் சர்க்கரை,முந்திரி , திராட்சை, ஏல பொடி சேர்த்து நன்றாக கிளறவும் , சர்க்கரை சேர்ந்தவுடன் கேரட் சிறிது ஈர பதமாகிவிடும்.அதனால் ஈர பதம் வற்றி , கேரட் கெட்டி ஆகும் வரை கிளறவும்.


௮) இறுதியாக மீதமிருக்கும் நெய் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.


௧௦) சூடான , சுவையான கேரட் ஹல்வா தயார் .பிரிட்ஜ்இல் வைத்தது ஒரு வரம் வரை சுவைக்கலாம்.

குறிப்பு :
௧) ஒவொரு நிலையிலும் கேரட் தண்ணீர் பதம் இல்லாமல் இருக்கவேண்டும் .தண்ணீர் சரியாக வற்றாமல் இருந்தால் சீக்கிரம் கெட்டுவிடும்.
௨) நெய் வேண்டுமானால் இன்னும் 4 தேக்கரண்டி அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.
௩) கண்டென்ஸ்ட் மில்க் இல்லாமலும் செய்யலாம் , அப்பொழுதும் சுவையாகத்தான் இருக்கும் . அனால் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவில்லை என்றால் சர்க்கரை அளவை 1 / 4 கப் அதிகப்படுத்தவும் .

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...